Illegal Fishing Palk Strait 2026 – tamilnaadi.com

எல்லை தாண்டிய 10 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது: 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (13) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு விசைப்படகையும் (பதிவு இலக்கம்: TN 10 MM 513) அதிலிருந்த 10 மீனவர்களையும் கைது செய்தனர்.

குறித்த மீனவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகு காரைநகர் கடற்படை முகாமிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத் துறையினரிடம் (Department of Fisheries) ஒப்படைக்கப்பட்டனர்.

இன்று பிற்பகல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மீனவர்களை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறுவதால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், கடற்படையினர் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த வாரத்திலும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.