hospial – tamilnaadi.com

வைத்தியசாலையில் தீ – சாவடைந்த கொரோனா தொற்றாளர்கள்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளனர்.

இது சம்பவம் தொடர்பாக அகமது நகர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸலே கருத்து தெரிவிக்கையில்,

அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று இடம்பெற்ற கொடூர தீ விபத்தில், 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்ததாகவும், இந்த கொடூர தீ விபத்து இன்று 11 மணிக்குநடந்ததாகவும், விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு 10 கொரோனா தொற்றாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவத்தால் அகமதுநகர் பகுதி பெரும் துக்கத்தில் மூழ்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மருத்துவமனை மீது தீவிரவாதிகள் தாக்குதல்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் கடந்த நாட்களாகவே பொதுமக்கள் மீதும்  வியாபாரிகள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள்.

பெமினா எனுமிடத்தில் உள்ளது ஸ்கிம்ஸ் மருத்துவமனையை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு சில பகுதியில் தீ பற்றியபோது முதலில் பொலிஸார் இது தீ விபத்து என நினைத்துள்ளனர்.

பின்னர் தான் அது தீவிரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மருத்துவமனை அருகிலிருந்து தங்கும் விடுதிகளை பாதுகாப்புப் படையினர் உடனே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது .

அத்தோடு உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .

இந்நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்களிடையில் பரபரப்பை எட்டப்படுத்தியுள்ளது.

#india

யாழ். வாகன விபத்தில் முதியவர் பலி !
பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி எனும் நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் வழமைபோன்று நேற்றைய தினமும் (12) பால் வியாபாரத்தில் ஈடுபட்டு முடித்த பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதன்போது வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தை நோக்கி அராலியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் .

முதியவரை விபத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .