hamas attacks israel – tamilnaadi.com

காசாவில் உணவு பொருட்கள் பற்றாக்குறை : வெளியான தகவல்
காசாவில் உணவு பொருட்கள் பற்றாக்குறை : வெளியான தகவல்

காசா பகுதிக்கான உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உதவிகளை ஏற்றிச் செல்லும் மேலும் 40 கொள்கலன்கள் காசா பகுதிக்குள் பிரவேசிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உலக உணவுத்திட்டம் மேலும் குறிப்பிடுகையில்,

“காசா பகுதியில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க சுமார் 40 கொள்கலன்களில் உதவி தேவையாக உள்ளது.

மேலும், காசாவில் உள்ள 2 மில்லியன் மக்களுக்கு உணவை வழங்குவதற்கு நாளொன்றுக்கு சுமார் 100 கொள்கலன்கள் அவசியமாகும்.” என சுட்டிக்காட்டியுள்ளது

இஸ்ரேல் : ஹமாஸ் போரில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் : ஐ.நா. பொது செயலாளர்
இஸ்ரேல் : ஹமாஸ் போரில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் : ஐ.நா. பொது செயலாளர்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என போர் விதிகள் கூறுவதாக ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேபாளத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது’ என பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஹமாஸ் விதித்துள்ள நிபந்தனை
இஸ்ரேலுக்கு ஹமாஸ் விதித்துள்ள நிபந்தனை

இஸ்ரேலிய சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 23வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கிலும், ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் நோக்கிலும் இஸ்ரேலிய இராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி இஸ்ரேலிய இராணுவ படையின் இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், ஹமாஸ் அமைப்பை முழுவதும் ஒழிக்கும் வரை இந்த போர் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை உடனடியாக இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்.

தீவிரமடையும் போர்க்களம்! 9000 உயிர்களை பலி
தீவிரமடையும் போர்க்களம்! 9000 உயிர்களை பலி

ஹமாஸ்-இஸ்ரேளுக்கு இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய பாலஸ்தீனத்தின்-காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 7, 703 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ்-இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1,403 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் மேலும் 109 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,217 ஆக உயர்ந்துள்ளது.

ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் 23வது நாளாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.