GST Issues – tamilnaadi.com

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!
லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய மேலும் 6 வார கால அவகாசம் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக அன்புச்செழியனிடம் பெற்ற ரூ.21 கோடியே 29 இலட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றது. இதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடனைத் தீர்க்கும் வரை விஷால் தயாரிக்கும் படங்கள் லைகாவிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஒப்பந்தம் மீறப்பட்டதாக லைகா தொடர்ந்த வழக்கில், அசலுடன் 30% வட்டியையும் சேர்த்து வழங்கத் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், நிபந்தனையாக ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்த உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள்.

நடிகர் விஷாலுக்கு தற்போது ஜிஎஸ்டி (GST) தொடர்பான சில சிக்கல்கள் இருப்பதால், குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதற்கு மேலும் 6 வார கால அவகாசம் தேவைப்படுகிறது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த கால அவகாசக் கோரிக்கையை ஏற்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.