government staff – tamilnaadi.com

2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு
2000 மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு

நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் கிராம சேவை மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கிராம உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான அரச அதிகாரிகளாக காணப்படுகின்றனர்.

ஆகவே, கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றமை அனைத்து விதமான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும்.

இதனால், புதிய நபர்களை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறல்லாத பட்சத்தில், கிராம உத்தியோகத்தராக செயற்பட விரும்பும் அரச அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் – அரச ஊழியர்கள் சிக்கலில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவாவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச சேவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நியாயமான தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த பொது நிர்வாக  அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இந்த அதிகாரிகள் இதுவரை பெற்ற ஒருங்கிணைந்த சம்பளத்தில் நியாயமான சதவீதத்தை மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் தினம் வரை அனைத்து வகையான கடன்கள் மற்றும் சம்பளத்தில் வசூலிக்கப்படும் வட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

கிண்ணியாவில் ஏற்பட்ட அவலம் காரைநகரிலும் ஏற்படும் அபாயம்!!
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகு பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.

குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.

மேற்படி பாதையில் கேபிள் அறுந்துபோதல், வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைதல் போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது.

எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.

இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது.

ஆனால், தற்போது பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.

அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர். படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே, பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள அரச பணியாளர்கள்!
அரச பணியாளர்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் சம்மேளத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.ஏ.பீ. பஸ்நாயக்க இம்முறை பட்ஜெட்டில், அரச பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரச பணியாளர்கள் கடும் பொருளாதார பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாதாந்தம் அவர்களது சம்பளத்தை 16,000 ரூபாயாகவும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கோரிக்கை அரசாங்கம் நிறைவேற்றாதபட்சத்தில்  எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி
அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி

அரச அதிகாரிகள் கடமைக்கு வரும் நாள்களுக்கு மட்டும் எரிபொருள் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது.

மேலும் ,  அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக குறைப்பது தொடர்பான யோசனையை சகல அமைச்சுக்களும் அடுத்த வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாத் தாக்கத்தால் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற்கொண்டு அரச செலவுகளை குறைப்பதற்காகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளை மட்டுப்படுத்தல் தொடர்பில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச கடந்த அமைச்சரவை கூட்டத்தில் யோசனையை முன்வைத்துள்ளார்.

பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் !
பணிக்கு செல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் !

பணிக்கு செல்லாத அரச ஊழியர்கள் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாத காலமாக ஒரு நாள் கூட பணிக்கு செல்லாத பெருமளவு அரச ஊழியர்கள் மற்றும் ஒரு வருட காலத்துக்கும் மேல் ஒருநாள் கூட பாடசாலைக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், உயர் அதிகாரிகள் சில மணிநேரம் மாத்திரமே கடமைக்கு வந்து போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை பெறுகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் அலுவலகங்களில் 2, 3 மணித்தியாலங்கள் மாத்திரமே கடமையில் இருந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் தமது பணியாளர்களின் கடமை நேரத்துக்கு மாத்திரமே ஊதியம் வழங்குகின்றது.

மேலும் சில நிறுவனங்கள் எவ்வித கொடுப்பனவும் வழங்காது அடிப்படை ஊதியத்தை வழங்கி வருகின்றன எனவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.