Gota – tamilnaadi.com

கோட்டா பதவி விலகுவதால் தீர்வு கிடைக்காது! – நாமல் தெரிவிப்பு
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகுவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னோடியான கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கிச் செல்ல ஒரே வழி.

அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது மிகவும் அவசியம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பதவியில் இருப்பவர்களை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது.

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பேன்” – என்றார்.

#SriLankaNews

இரு மாதங்களுக்குள் ’21’ – ரணிலிடம் கோட்டா உறுதி
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தத்தை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கொண்டதாக 21 ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இதன்படி தற்போது புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பு திருத்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி இது தொடர்பில் உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

புதிய அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

அவசர சந்திப்பில் கோட்டா – ரணில்! – தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

கோட்டாவின் கோரிக்கையை அடியோடு நிராகரித்தார் சஜித்!
பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நிராகரித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகங்கள் இந்தச் செய்தியை இன்று வெளியிட்டுள்ளன.

இடைக்கால அரசுக்கு நிபந்தனைகளை முன்வைத்துள்ள சஜித், பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

கோட்டா உடனடியாகப் பதவி விலக வேண்டும்! – சஜித் வலியுறுத்து
அவசரகாலச் சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜிநாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

கோட்டாவுக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு? – சுமந்திரன் தகவல்
அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை, சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அவர் கூட்டமைப்பின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம் கூடவுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி.

” ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும்.  எனினும், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்க வேண்டும்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலான விளக்கம் தமக்கு வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும்.” – என்று கூறினார்.

#SriLankaNews

முடிவு ஜனாதிபதியிடம்; எதற்கும் பிரதமர் தயார்! – கோட்டாவுக்கு மஹிந்தர் செய்தி
“பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்கு உசிதமானது என நீங்கள் கருதும் எந்தத் தீர்மானத்தையும் எடுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார்” என தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போதே பிரதமர் மேற்படி விடயத்தை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் எனப் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

சர்வகட்சி இடைக்கால அரசை நியமிப்பதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இராஜிநாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பெளத்த பிக்குகளின் சங்க சபா நேற்று கொழும்பில் வைத்து கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதையடுத்தே இந்தத் தகவலை ஜனாதிபதிக்குப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

– ‘காலைக்கதிர்’ (01.05.2022 – மாலைப் பதிப்பு)

“மக்கள் போராட்டத்தை இல்லாதொழிக்க கோட்டா போட்ட முடிச்சே இடைக்கால அரசு”
“ராஜபக்சக்கள் உள்ளிட்ட அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே நாட்டு மக்களும் போராடும் மக்களும் கோருகின்றனர். இந்நிலையில், இடைக்கால அரசு என்ற குண்டைக் கொண்டு வந்தது ஒரு சதியாகும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“மக்கள் போராட்டத்தைத் தோற்கடிக்க – அந்தப் போராட்டத்தை இல்லாதொழிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஒரு குழுவினரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இடைக்கால அரசு என்ற கயிற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொருஉறுப்பினரும் சிக்கவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடக்குமுறை அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைக்கான பேரணி ஐந்தாம் நாளான இன்று கொழும்பை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் பாத யாத்திரையில் கலந்துகொண்டுள்ளனர்.

யக்கலையில் நேற்று மாலை நான்காம் நாள் நடைபயணத்தை நிறைவு செய்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இடைக்கால அரசு தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.

அரசு அச்சாறாகிட்டது. அச்சாறாகியுள்ள ஆட்சியில் இடைக்கால அரசை அமைப்பதற்கோ அல்லது பங்காளிகளாகுவதற்கோ ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை. இந்த நாடகம் குறித்து ஆரம்பத்திலேயே நான் அறிந்திருந்தேன்.

எதிர்க்கட்சித் தலைமைப் பதவியோ அல்லது அதற்கு அப்பாலான பெரிய பதவிகளோ எனக்கு ஆபரணங்கள் இல்லை.

அந்தப் பதவிகளுக்கு அடிபணிந்து மக்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை.

மக்களின் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைச் சலுகைகளுக்காக காட்டிக்கொடுக்கும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டமானது, இந்நாட்டு மக்களுக்கு வெற்றியைக் பெற்றுக்கொடுக்கும்.

இன்று சிலர் நிதி சலுகைகளை வழங்கி, அரசை அமைக்க முயற்சித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும் இவ்வாறான சலுகைகளை நம்பி ஏமாறமாட்டார்கள்” – என்றார்.

#SriLankaNews

பதவி விலகுமாறு கோட்டா என்னிடம் கூறமாட்டார்! – மஹிந்த நம்பிக்கை
“என்னைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு அவர் என்னிடம் கூறவும் மாட்டார் என்று நம்புகின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று அலரி மாளிகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகர சபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றேனும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

#SriLankaNews

பதவி விலகாவிடின் பெரும் விளைவைச் சந்திப்பீர்! – ராஜபக்சக்களுக்கு சந்திரிகா எச்சரிக்கை
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர். ஒருவரை மட்டும் பதவி விலகக் கோரும் இந்தச் சுயலாப அரசியல் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபயவும் மஹிந்தவும் பதவி விலக வேண்டும் எனக் கோரியே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு முன்பாகவும் இரவு பகலாக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டும்.

காலம் தாழ்த்தாது கெளரவமாக இருவரும் பதவி விலகி புதிய ஆட்சிக்கு வழிவிட வேண்டும். பிரதமர் மஹிந்தவை மட்டும் பதவி விலக்கி ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இடைக்கால அரசு அமைந்தால் அதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் மேலும் வீரியமடையும்.

எனவே, மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் பெரும் விளைவுகளை இருவரும் சந்திக்க வேண்டிவரும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இரட்டை வேடத்தில் இருப்பதால் நாடாளுமனத்தில் பிரேரணைகள் மூலம் அரசையும் ராஜபக்சக்களையும் கவிழ்ப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று இப்போது சொல்ல முடியாது. எனினும், பிரேரணைகள் வாக்கெடுப்புக்கு வந்தால் ஆளும் – எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மை முகங்களை அறிந்துகொள்ள முடியும்” – என்றார்.

#SriLankaNews