goa – tamilnaadi.com

வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு.., எங்கு தெரியுமா?
வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு.., எங்கு தெரியுமா?

வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே ஒரு வீட்டை கட்டி முடிப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. வீடு கட்டுவதற்கு தகுந்த நேரத்தில் பணம் கிடைக்க வேண்டும்.

சிலருக்கு ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு ஒரு ஆண்டு ஆகலாம். சிலருக்கு 5 ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால், கோவா யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி முடிப்பதற்கு வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்கள் தான் ஆகியுள்ளது.

கோவாவில் உள்ள பாம்போலிம் பகுதியில் இருக்கும் டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று ஒரு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதாவது, ஒரு சுற்றுலா அமைப்பு, ஒரு கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகள் இணைந்து திறனான தொழிலாளர்களை நம்பியிருக்காமல் ஒரு சிறந்த முன்மாதிரியான வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இதற்காக பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. சுமார் 130 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.

21 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் இந்த வீடானது 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்டது.

பணம் மற்றும் நேரத்தை மிச்சமாகும் இந்த கட்டுமானம் அதிக மக்களை கவரும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் கூறியுள்ளனர்.

காளான் மூலம் தங்கம் தயாரிக்கும் அதிசயம்! Goa ஆராய்ச்சியாளர்கள் சாதனை
கோவாவைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள், காட்டு காளான் வகையிலிருந்து தங்க நானோ துகள்களை (Gold Nanoparticles) தொகுப்பு முறையில் தயாரித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கோவாவில் காணப்படும் “ரோன் ஓம்லி” காளான்களை முப்பரிமாண வடிவத்தில் வளர்த்து, அதன் மூலம் தங்க நானோ துகள்களைத் தொகுத்தனர்.

இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

தங்க நானோ துகள்கள் மருத்துவம், மின்னணுவியல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் வகை, “ரோன் ஓம்லி” (Roen Olmi) என அழைக்கப்படுகிறது.

இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது. மழைக்காலங்களில் கிடைக்கும் இந்த காளான் வகை, கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.

இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது.

இது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து பயணித்த பெண் அதிகாரி! விசாரணையில் சிக்கிய கொடூர தாய்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண் அதிகாரி ஒருவர், தனது 4 வயது மகனை சூட்கேசில் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசனா சேத் (39).

தன் கணவருடனான கருத்து வேறுபட்டதால் சுசனா சேத் அவரை பிரிந்து, தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார்.

இவர் கடந்த சனிக்கிழமை கோவாவிற்கு மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹொட்டலில் அவர் தங்கினார்.

நேற்று காலை சுசனா ஹொட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவருடன் மகன் வெளியேறவில்லை.

மேலும், அவர் தங்கியிருந்த அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து சுசனா வெளியேறும் போது அவரது மகன் உடன் இல்லாததை ஹொட்டல் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த ஹொட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் ஹொட்டலுக்கு விரைந்த பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கினர். சுசனா சேதத்தை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொலிஸார், மகன் எங்கே என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய முகவரியில் சென்று விசாரித்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் சுசனா பயணித்த டாக்சி ஓட்டுநரை பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவரது காரில் சிறுவன் இல்லை என தெரிய வந்ததால், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை கொண்டுவருமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

அதன்படி ஓட்டுநரும் காவல் நிலையம் வர, காரினை பொலிஸார் சோதனை செய்தபோது சூட்கேசில் சுசனா சேத்தின் மகன் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது தான் சுசனா சேத் தன் மகனை கொன்று, சூட்கேசில் அடைத்து வைத்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.