featued – tamilnaadi.com

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக ஒரு நீண்ட கால மற்றும் ‘பிரம்மாண்டமான’ ராணுவக் பிரச்சாரம் தற்போது நடந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

சமீபத்திய வாரங்களில் ஈரானின் செயல்பாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல், தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரான் மீதான இந்தத் தாக்குதல்களை வரவேற்றுள்ளது. இரு நாடுகளும் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதல்கள், ஈரானின் ராணுவத் திறனை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியுள்ளது. ரஷியா மற்றும் சீனா இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் இந்தத் தாக்குதல்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பது உலக நாடுகளின் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது. இதனால் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், தேவையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!
இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜனித் மதுசங்க டி சில்வா என்ற ‘பொடி லெசி’யை (Bodi Lassie) 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், பிற்பகல் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் (Baddegama Magistrate Court) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு முதல் பொடி லெசி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன

அவற்றில் 5 கொலை வழக்குகள் 13 கொலை முயற்சி மற்றும் கடுமையான உடல் ரீதியான தீங்கு மற்றும் 8 குற்றங்களைத் திட்டமிட்டு உதவி செய்தமை உள்ளிட்டவை அடங்கும்.

பலப்பிட்டிய நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்த ‘பொடி லெசி’, 2025 ஜனவரி 16 அன்று இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபரின் விசேட கோரிக்கையின் பேரில், இந்திய அதிகாரிகளால் அவர் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள போதிலும், அவர்கள் குறித்து யாரும் அக்கறைகொள்ளவில்லை என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் (டிசம்பர் 13, சனிக்கிழமை) மன்னாரிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, கடற்றொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.எம்.ஆலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டதோடு, மன்னார் மாவட்டம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. மன்னார் தீவில் அதிகளவான கிராமங்கள் கடற்றொழிலாளர் கிராமங்களாகக் காணப்படுகின்றன.

தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை உள்ள கடற்றொழிலாளர்களும் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“கடற்றொழிலாளர்களின் பாதிப்புகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்டக் கடற்றொழிலாளர் அமைப்புக்கள் ஊடாகச் சமாசத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.”

இது தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் அமோரி மாகாணக் கடற்கரையில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!!
ஜப்பானின் அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (Japan Meteorological Agency – JMA) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவிதத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

யாழ்ப்பாணம் இளைஞர் படுகொலை: கைதான 6 பேரின் விளக்கமறியல் டிசம்பர் 15 வரை நீடிப்பு!
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை 24 மணி நேரம் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர்.

காவல்துறையினரின் தடுப்புக் காவல் விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளைக் காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து பயணித்த காரொன்றும் ஏழாலை பகுதியில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

தடுப்புக் காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (டிசம்பர் 3) முற்படுத்தப்பட்டனர். அப்போது, மேலதிக நீதிவான் உசைன் அவர்களை டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!
நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம் 28) அதிகாலை 5.00 மணிக்கு வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து 20 கி.மீ. தென்மேற்கில் நகர்ந்த ‘டிட்வா’ புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 50 கி.மீ. தெற்கே மையம் கொண்டுள்ளது. இந்த அமைப்பானது வடக்கு சாய்வாக வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் 315 மி.மீ பதிவாகியுள்ளது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பிரதேசத்தில் 305 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், மூன்றாவது அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் பதிவாகியுள்ளது, அதன் அளவு 223.9 மி.மீ ஆக உள்ளது.

இதன்படி, இலங்கையில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!
இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். கடல்வளங்களைப் பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கித் துறைமுகத்தை நகர்த்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் கடற்றொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

கடற்றொழில் விடயத்தில் இலங்கை இன்னும் பழமையான நிலையிலேயே உள்ளது என்பதை ஏற்றாக வேண்டும். ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளன.

நவீன படகுகள் பற்றி கவனம் செலுத்தப்படாததாலும், பழைய படகுகளாலும் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து, மீன்பிடித்துறை வலுவிழந்து வருகிறது.

இந்நிலையிலிருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் உறுதியாக உள்ளது.

கடற்றொழில் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசிய அமைச்சர் 2025 வரவு – செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்குக் கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தைக் கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ரின் மீன் இறக்குமதி செய்யும் நிலை காணப்பட்டது. அதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த உப்புப் பிரச்சினை தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் இறுதியாக, மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று தாம் தீர்வுகளை வழங்கி வருவதாகவும், மீனவர்களின் பிரச்சினைகள் எமக்குத் தெரியும் என்றும் அவற்றைத் தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளைச் செய்வோம் என்றும் உறுதியளித்தார்

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!
திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி அன்று புதிதாக அமைத்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களுக்கு, எதிர்வரும் ஜனவரி 14 ந் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி எம்.என்.எம். சம்சுடீன் இன்று (நவம்பர் 26) அழைப்பாணை (Summons) விடுத்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாராதிபதி கல்யாணவன்ஸ திஸ்ஸ தேரர் மற்றும் அவருடன் இருந்த சிலருக்கு எதிராக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களமும்,திருகோணமலை துறைமுக பொலிஸாரும் முன்வைத்த மனுவை ஆராய்ந்த பின்னர் இவ் வழக்கில் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அடுத்த தவணை அன்று இது தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸார் மன்றிற்கு முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் சார்பில் அதன் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளும்,திணைக்களம் சார்ப்பாக சட்டத்தரணியும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதே வேளை பொலிஸ் தரப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,திருகோணமலை பிரிவிற்கான பொலிஸ் அத்தியட்சகர்,துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

எதிராளிகளோ அவர்களது சார்பில் சட்டத்தரணிகளோ மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

திருமலை புத்தர் சிலை சர்ச்சை: முதுகெழும்பில்லாத அரசாங்கம்! – கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசம்!
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் இன்று (நவம்பர் 18) திருகோணமலைக்கு விஜயம் செய்து, ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கத்தின் மீது விமர்சனம்: தற்போதைய அரசாங்கத்தை “முதுகெழும்பில்லாத அரசாங்கம்” என அவர் விமர்சித்துள்ளார்.

காசியப்ப தேரர் மீதான தாக்குதலின் காணொளியைக் கண்டு தாம் ஆவேசமடைந்ததேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் பௌத்த சமயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தினால் இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான குறித்த விகாரைக்கான வரலாறு சுனாமிக்கு (2004) முதலே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இலங்கை பொலிஸார் உண்மையான நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தவறான செய்திகள் உருவாக்கப்படுவதால், உண்மையான நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே சமரசம் இன்மையை உருவாக்க வாய்ப்புள்ளதாகப் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இந்தப் பிரதேசம் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பகுதியாக இருப்பதால், சதி நோக்கமுள்ள நபரால் புத்தர் சிலைக்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தப்பட்டால், அது பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பெரும் பிரச்சினையாக அமையக்கூடும். எனவே, புத்தர் சிலையை பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அகற்றி, திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நேற்று (நவம்பர் 16) கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்களத்தால் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதன் பேரில், சட்டவிரோத கட்டுமானப் பணிகளை நிறுத்தச் சென்றபோது, அங்கு கூடியிருந்த ஒரு குழுவினர் கலவரம் செய்ததாகவும், அதனைப் பொலிஸார் கட்டுப்படுத்தியதாகவும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தாக்குதல் நடத்தவில்லை என்றும் பொலிஸார் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

இணக்கப்பாடு மற்றும் மீள ஒப்படைப்பு: தற்போது பிரதேசத்தில் சமாதானமான நிலைமை நிலவுவதாகவும், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எடுக்கப்பட்ட புத்தர் சிலை, மீண்டும் பிரதிஷ்டை செய்வதற்காக மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்கள் இன்று (நவம்பர் 17) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.