express pearl – tamilnaadi.com

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்! – 25 வரை காலக்கெடு
2021 ஆம் ஆண்டு இந்நாட்டின் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எஞ்சியுள்ள பாகங்களுக்கு அருகில் சென்று ஆய்வு செய்து இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள நிபுணத்துவக் குழுவுக்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (நாரா) ஆகியவற்றுக்கு அறிவித்தார்.

கப்பலுக்கு அருகில் அல்லது கப்பலுக்குள் செல்வதற்கு முடியாமல் இருப்பது சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதத்தை அளவிடுவதற்கு தடையாக இருப்பதாக சுற்றாடல் மற்றும் ஏனைய சேதங்களின் முழு அளவை கணக்கிடுவதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

ஆபத்தானது எனக் காண்பித்து கப்பலுக்கு அருகில் செல்வது தடுக்கப்பட்டாலும், கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்று வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய கப்பலுக்கு அருகில் சென்று இதற்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நஷ்டஈடு கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கிற்கு பாதிப்பாக அமையலாம் என்பதால் இதற்கான வசதிகளை விரைவில் ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை ஆகியவற்றுக்கு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

குறித்த கப்பலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்வதற்கு இன்னமும் 45 நாட்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும், ஏற்கெனவே அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டமைக்கு அமைவாக சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவது பாதகமானதாக அமையலாம் என சூழலியலாளர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் கருத்துத் தெரிவித்தனர்.

இதுவரை விபத்துத் தொடர்பில் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்குத் தாக்கல் செய்வது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல ரக்காவ இங்கு தெரிவித்தார்.

இந்த அறிக்கைக்கு அமைய குறிப்பிட்ட நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்துக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஏப்ரல் 25ஆம் திகதி மீண்டும் சந்திப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

#SriLankaNews

6 பில்லியன் டொலர் நட்டஈடு கோரும் இலங்கை!
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று , இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் கடல் பகுதியில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்ததினால் இலங்கையின் கடல் வளத்திற்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

எக்ஸ்பிரஸ் பேர்ள் சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்டு அழிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது கப்பல் தரித்திருந்த இடத்திலிருந்து துறைமுகத்துக்குள் வரும் வரையிலான சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. நீதவான் விசாரணைகளில் இது வெளிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (30) அமர்வில் கலந்துகொண்டு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சபையில் உரையாற்றிய கிரியெல்ல எம்.பி, இந்த சி.சி.டிவி காட்சிகள் அழிக்கப்பட்டதால் இக் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நட்டஈட்டை பெறுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதனை அரசாங்கமே அழித்தது எனவும் கூறினார்.

#SriLankaNews

எக்ஸ்-பிரஸ் பேர்ள் தீ விபத்து – இழப்பீடு கிடைப்பதில் தாமதம்!
கொழும்பு துறைமுகத்துக்கு சில மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் எக்ஸ்-பிரஸ் பேர்ள் எண்ணெய் கப்பல், தீ விபத்து காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட வேண்டிய  இரண்டாவது இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் எண்ணெய் கப்பலிருந்து சேதங்களை மீட்கும் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  முதற்கட்டமாக இலங்கைக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக கிடைத்துள்ளது.

இரண்டாம் கட்டத்திற்கான மொத்த இழப்பீடு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.  முதல் தவணையாக 02.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அந் நிறுவனம் இணக்கம் தெரிவித்த போதிலும், இலங்கைக்கு இதுவரை நட்டஈடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுரவிடம் வினவியது போது,

கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்தது.

இதனால் நாட்டின் கடல்பரப்புக்கு  ஏற்பட்டுள்ள சேதம் மிகப்பெரியது என தெரிவித்தார்.

#SriLankaNews

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து! – மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து! – மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு!

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் சுற்றுச்சூழல் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

விபத்தையடுத்து கப்பலில் இருந்து கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடல் மாதிரிகளையும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தன என சந்தேகிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள், வெளிநாட்டு இரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.