epdp – tamilnaadi.com

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!
யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு இருக்கும் மீள் சுழற்சி மையத்தால் தாங்கள் தினமும் சிரமங்களினை எதிர்நோக்குவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், நாம் இந்த குப்பை மேட்டால் அன்றாடம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளுகிறோம்.

அது மாத்திரமல்லாமல், குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அங்கே கொட்டப்படும் கழிவுகள் தரம்பிரிக்கப்படுவதில்லை என்றும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டு மாநகர சபையானது காணப்பட்ட போது தரமான கழிவு முகாமைத்துவம் பேணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கழிவுப் பொருட்கள் மூலம் சேதனப் பசளை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போதுதான் இவ்வாறான மனிதத்துக்கு ஒவ்வாத பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. கழிவுகளை எரிக்கிறார்கள்.

இதன் காரணமாக, அங்கு இருக்க முடிவதில்லை. இந்த பிரச்சினைக்கு முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் எமக்கு தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாநகர சபைக்கு உள்ளே செல்ல வேண்டிய நிலை உருவாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

நான்கு ஜனாதிபதிகள், மூன்று பிரதம அமைச்சர்களின் கீழ் 15 ஆண்டுகளாக அமைச்சு பதவிகளை வகிக்கும் டக்ளஸ்!
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார்.

டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த பின்னர், 2000 ஆம் ஆண்டில் அவருக்கு முதன்முறையாக அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

அந்தவகையில் சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ச , மைத்திரிபால சிறிசேன ( 52 நாட்கள் ஆட்சி) மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகளின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம். ஜயரத்ன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய பிரதம அமைச்சர்களின் கீழும் செயற்பட்டுள்ளார்.

#SriLankaNews

மக்களுக்கு துரோகம் செய்வதை தமிழ் தரப்புக்கள் நிறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்
உருவாகியிருக்கின்ற அரசியல் சூழலைப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மக்களை மீட்பது மாத்திரமன்றி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பமாகவும் தமிழ் தரப்புக்கள் இச் சூழலைப் பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைக் காணும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஆரம்பமாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, அரசியல் கைதிகள் விடுதலை – காணாமல் போனோர் விவகாரத்திற்கான தீர்வு – பல்வேறு காரணங்களினால் பயன்படுத்தப்பட முடியாமல் இருக்கும் எமது மக்களின் காணிகளை விடுவித்தல் – இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்ற மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பமாக இந்தச் சூழலைப் பயன்படுத்த தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும்.

மாறாக, சுயலாப அரசியல் நலன்களை மனதில் கொண்டு, வழமை போன்று தமிழ் தலைமைகள் எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ளுமாயின், அது எமது மக்களுக்கு இழைக்கின்ற இன்னுமொரு வரலாற்று துரோகமாகவும் தவறவிடப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பமாகவும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

ரணிலுக்கு ஈ.பி.டி.பி. ஆதரவு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

சிங்கள மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தினாலே தீர்வு கிடைக்கும்! – கூறுகிறார் டக்ளஸ்
தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். அதற்கு மதிப்பளிக்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியங்கள் களையப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருகின்றது.

ஆனால் எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றவர்கள் நாம்.

இதன் காரணமாக புலிகள் எம்மில் பலரை கொலை செய்திருக்கின்றார்கள். என்னை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வந்துள்ளோம்.

அதனடிப்படையிலேயே எமது அரசியல் செயற்பாடுகளும், தென்னிலங்கை மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனான எமது உறவும் இருந்து வருகின்றது.

இந்த அணுகுமுறையினையே உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வன்முறைகள் ஊடாக எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

எனவே, எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் – என்றுள்ளது.

#SriLankaNews

யாழ். செயலகத்தை முற்றுகையிட்டு ஈ.பி.டிபியினர் போராட்டம்!
பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இன்றையதினம் இடம்பெற்றது.

ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வந்த மாவட்ட செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகஜரொன்றை கையளித்ததுடன், 10 நாட்களுக்குள் பிரச்சனைக்குரிய தீர்வு காணப்பட வேண்டுமெனவும் இல்லை எனில் முழுமையாக மாவட்ட செயலகத்தை முடக்குவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை கணக்கில்கொள்ளாது தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டுவருதால் மக்களின் அவசிய தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

குறிப்பாக, பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ். மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது. அத்துடன் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால் யாழ் மாவட்டத்தில் மாவட்ட செயலகம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக காணப்படுகின்றது.

மாவட்ட செயலகத்தின் இவ்வாறான நிலைமை மக்களின் தேவைகருதிய செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதை பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் நாளாந்தம் முறையிட்டநிலையில் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் – என்றனர்.

#SriLankaNews

யாழ் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து திங்களன்று போராட்டம்! – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்
மக்கள் நலன்கருதிய வகையில் பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ். மாவட்ட செயலகம் அவற்றை கட்டுப்படுத்தி தனது தன்னிச்சையான செயற்பாடுகளை திணிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் ஒன்றை 14.03.2022 திங்களன்று முன்னெடுக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –

மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களது விருப்புகளுக்கேற்ப அவசியமானதும் முன்னுரிமையிலானதுமான திட்டங்களை மக்களிடமிருந்து நேரடியாக பெற்று அவற்றை செய்து கொடுப்பதே மக்களிளின் தற்போதைய தேவையாக உள்ளது.

ஆனால் யாழ் மாவட்ட அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை கணக்கில் கொள்ளாது தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டுவருதால் மக்களின் அவசிய தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

குறிப்பாக பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுயாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ் மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது. அத்துடன் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால் யாழ் மாவட்டத்தில் மாவட்ட செயலகம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக காணப்படுகின்றது.

மாவட்ட செயலகத்தின் இவ்வாறான நிலைமை மக்களின் தேவைகருதிய செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதை பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் நாளாந்தம் முறையிட்டவண்ணம் உள்ளனர்.

இவை தொடர்பில் நாம் பிரதேச செயலகங்களில் சுட்டிக்காட்டும்போது அவ் அதிகாரிகள் இவ் உத்தரவுகளை மாவட்ட செயலகமே வழங்குவதாக குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் மாவட்ட செலகத்தின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதை நாம் நாளாந்தம் காணமுடிகின்றது.

குறிப்பாக அரசாங்கத்தால் வட்டாரத்துக்கு நான்கு மில்லியன் முன்மொழிவுகளை அரியல் இன்றின் வட்டாரத்தின் பொது அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது யாழ்ப்பாணத்தில் மட்டும் இல்லாத நிலை உள்ளது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் குறித்த திட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்த உறுப்பினர்கள், யாழ் மாவட்டத்தில் இவ்வாறான தன்னிச்சையான நடைமுறையை யாழ் மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தியிருந்ததுடன் தமக்கான தீர்வை ஒரு வார காலப்பகுதிக்கான மாவட்ட செயலகம் வழங்காதுவிடின் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

காணாமல்போனவர்களின் உறவுகளை வைத்து கஜேந்திரகுமார் அணி பிழைப்பு நடத்துகின்றது!! – ஈபிடிபி
“காணாமல்போனவர்களின் உறவுகளை வைத்து கஜேந்திரகுமார் அணி பிழைப்பு நடத்துகின்றது. கொடுப்பனவுகளை வழங்கி போராட்டங்களை நடத்த தூண்டுகின்றது.” – என்று ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.தீலிபன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

” போர் காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள், தற்போது இங்கு வந்து இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். எமது தலைவர்மீது வீண்பழி சுமத்துகின்றனர்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிகிறது யதார்த்தம்! – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள்
இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்துகொண்ட யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பாவனைக்கு உதவாத நிலையில் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்படாமல் கைவிடப்படடிருந்த படகுகளே ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக இலங்கை கரைகளில் அவை தரித்திருப்பதால், சூழல் மாசடைதல் உட்பட பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்ராலின், சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த விவகாரம் தொடர்பான புரிதல் இல்லாதவர்களே, இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகள் ஏலமிடப்படும் விடயத்தினை திசை திருப்பும் வகையில் கருத்து தெரிவிப்பதாகவும், அவை சுயலாப அரசியல் நோக்கங் கொண்டவை எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

கூட்டமைப்பு தலைமைகள் ஆதரவு – உறுப்பினர்கள் எதிர்ப்பு!!
யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

16 உறுப்பினர்களும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முதல்வர் மணிவண்ணன் மீது ஆதாரத்துடன் சுமத்தினார்கள்.

இந்நிலையில், கட்சித்தலைமைகள் பாதீட்டை ஆதரிப்பதென முடிவு எடுக்கும் நிலையில் இருந்தாலும், உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு ஒத்துப்போகவில்லை.

அத்துடன், யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவன்ணன் தமிழரசு கட்சித்தலைவர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் பாதீட்டை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் களம் இறங்கியுள்ளதாகவும் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்.மாநகரசபையின் பாதீட்டில் மணிவண்ணன் அணியினருடன் ஈ.பி.டி.பி ஆதரவு அளிக்கும் எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடுநிலைமை வகிக்க கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொடர்பில் வாக்களிப்பு இடம்பெறும் கடைசி நிமிடம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews