Dubai Ishara Drug Network – tamilnaadi.com

துபாய் இஷார வலையமைப்பின் 3 முக்கிய ஏஜெண்டுகள் கைது: கம்பளையில் 20 வயது இளைஞர்கள் போதைப்பொருளுடன் சிக்கினர்!
துபாயில் இருந்து இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய கடத்தல்காரருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்த மூன்று இளைஞர்களைக் கம்பளை பொலிஸார் இன்று (17) அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். இவர்கள் கம்பளையின் அங்கம்மன மற்றும் துந்தெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கம்பளையின் தொலுவ பகுதியில் இருவரும், மஹர பகுதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது , இவர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி கம்பளை, நாவலப்பிட்டி, உலபனை, தொலுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல போன்ற பகுதிகளுக்குச் சங்கிலித் தொடராகப் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.

‘துபாய் இஷார’வின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பிலிருந்து இவர்களுக்குப் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையின் இளைஞர்களைப் போதைப்பொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தும் சர்வதேச வலைப்பின்னலைத் தகர்ப்பதற்குக் கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் பார்க்கப்படுகின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.