Dry Rations – tamilnaadi.com

மட்டக்களப்புச் சிறைக்கைதிகள் தங்கள் உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மனிதாபிமான உணர்வுடன் ஒரு முன்மாதிரியான பணியைச் செய்துள்ளனர்.

தமது இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவை நன்கொடையாக வழங்கிய சிறைக்கைதிகள், அதனை உலர் உணவுப் பொருட்களாக மாற்றி நேற்று (டிசம்பர் 5) உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.

இந்த உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாகச் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டன. பின்னர், இந்த உலர் உணவுப் பொதிகளைச் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் கையளித்தார்.

சிறைக் கைதிகள், தாம் சிறைக்குள் இருந்தபோதும் சமூகத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் கொண்டிருந்த கரிசனையை இந்த நன்கொடை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

நுவரெலியா பேரிடர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினர்!
நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஞானமுத்து ஆகியோர் நேற்று (டிசம்பர் 4) நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

முதற்கட்டமாக வட்டவளை, ரொசல்ல ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு விசேட தங்குமிடங்களில் இருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் (Dry Rations) இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து, அவர்களுக்கு உடனடித் தேவைகளை வழங்குவதற்கான உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

அனர்த்த நிவாரணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது!
சர்வதேச ஒற்றுமையின் குறியீடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படையின் C-17 Globe master விமானம் இன்று (டிசம்பர் 2) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

இந்த உதவியை ஐக்கிய அரபு இராஜ்ஜிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அல் அபாரி உத்தியோகபூர்வமாக கையளித்தார். இலங்கையின் சார்பாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர்.

இந்த உதவிப் பொருட்களிடையே ஒரு குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு போதுமான 1,116 உலர் உணவுப் பொதிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய 336 நிவாரணப் பொதிகள் என்பன அடங்கும்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் முதலாவது உதவித் தொகை நேற்று (01) நாட்டை வந்தடைந்தது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த 3,874 கைதிகள், சிறைச்சாலை நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 750 கிலோ அரிசி, 50 தேங்காய்ப் பால் மாப் பொதிகள், 100 கிலோ கொண்டைக்கடலை, 100 கிலோ, கௌபி, 10 கிலோ பயறு, 60 கிலோ சோயாமீட், 100 கிலோ சீனி, 10 கிலோ, தேயிலை, 10 கிலோ மிளகாய் தூள், 30 கிலோ உப்பு மற்றும் 100 கிலோ பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களை கைதிகள் அன்பளிப்பு செய்தனர்.

இந்த உலர் உணவுப் பொருட்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையின் சிரேஷ்ட அத்தியட்சகர் ரஜீவ் எஸ். சில்வா தலைமையிலான சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளால், இன்று கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையின் பிரதி மாநகர முதல்வர் ஹேமந்த குமாரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.