Disaster Victims – tamilnaadi.com

அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்: சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்த முயற்சிக்கும் நபர்கள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பெற்றோரை இழந்து  பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை பராமரிப்பில் எடுத்து, அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் எனக் கோரி பல்வேறு நபர்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு தொலைபேசி எண்களை பதிவிடுபவர்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சில அடையாளம் தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் தொலைபேசி எண்களை பதிவிட்டு, பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் தகவல்களை பெற்று பின்னர்  நிவாரணம் வழங்குவதாகக் கூறியும்,  குழந்தைகளின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டும் அவர்களை பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தும் போக்கு காணப்படுகிறது.

மேலும், இந்த குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம், அடிமைத்தனம் மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு ஆளாக நேரிடும்.

மேலும், ஒரு நபருக்கு குழந்தைகளை முறையான காவலில் எடுத்து பாதுகாப்பாக வளர்க்க அல்லது தத்தெடுக்க உண்மையான தேவை இருந்தால், இலங்கையில் நடைமுறையில் உள்ள பொதுச் சட்டத்தின் கீழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பிறகு அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

அதேநேரம் சமூக ஊடகங்களில் தொலைபேசி எண்களை பதிவிடும்  தெரியாத நபர்களுக்கு குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்குவதையும், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பற்றி விசாரிப்பதையும் தவிர்க்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரை இழந்து பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறிய குழந்தைகள் குறித்து யாராவது நிவாரணம் பெற வேண்டியிருந்தால், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அல்லது குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர் தகவல்களைப் பகிர வேண்டாம்: தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை பாயும் – அமைச்சு எச்சரிக்கை!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய சிறுவர்களின் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது பிரதான ஊடகங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் சிறுவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அத்துடன், அந்தப் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம்.

சிறுவர்களைச் சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுவர் விவகார அமைச்சு கடுமையாக எச்சரித்துள்ளது.

அத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்கள் இருந்தால், 1929 சிறுவர் உதவி இலக்கம், அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவிக்கலாம்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்துக்கு நன்றி தெரிவித்த நாமல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் தேவை!
அண்மையில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய எடுத்த தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நாட்களில் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்ததாகவும், அவர்களுக்கு உடனடி நிவாரணம் தேவை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத் தேவைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரிடம் தான் சிறப்பு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி கூட்டப்படும் எனச் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.