dilan perera – tamilnaadi.com

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்து
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்து

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இ்ந்த விபத்தில் படுகாயமடைந்தவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்துகமவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற போது தெற்கு அதிவேக வீதியின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றொரு வாகனத்தில் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து இடம்பெற்றபோது ​​காரில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் உட்பட ஐந்து பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலில் நாடாளுமன்றத் தேர்தல்! ரணில் இரகசிய நடவடிக்கை!!
முதலில் நாடாளுமன்றத் தேர்தல்! ரணில் இரகசிய நடவடிக்கை!!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்ட அடிப்படையில் இரகசியமாகச் செய்து வருகின்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின்படி, இந்த வருடம் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி விரும்பினால் அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.

எல்லோரும் ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதியோ நாடாளுமன்றத் தேர்தலைத்தான் முதலில் நடத்துவதற்கு இரகசியமான முறையில் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கி வரும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷவும், நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தினால் அரசுக்கு ஏற்படப் போகும் நன்மை பற்றி ஜனாதிபதிக்குப் பஸில் விளக்கிக் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில்தான் ஜனாதிபதி மேற்படி முடிவை எடுத்துள்ளார். ஆனால், அவர் வெளியே ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று காட்டுகின்றார்.” – என்றார்.

தமிழர்களின் ஆதரவை ரணில் பெற முடியாது: சஜித் தரப்பு குற்றச்சாட்டு
தமிழர்களின் ஆதரவை ரணில் பெற முடியாது: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 சத வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இந்நிலையில் 60 சதவீத வாக்குகளை வைத்துத்தான் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அது உறுதியான முடிவாக அமையாது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும் வரை அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள்.

எனவே, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள மக்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்தான் தற்போது நிற்கின்றனர். ரணில் விக்ரமசிங்க எப்படித்தான் முயற்சித்தாலும் ராஜபக்சர்களுடன் இருக்கும் வரை அவரின் முயற்சி வெற்றியளிக்காது.

தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு உள்ளது. அந்த மக்களின் உரிமைக்காக முன்னின்றவன் நான். அதனால் சிங்களப் புலி என்றுகூட முத்திரை குத்தினர்.” என தெரிவித்துள்ளார்.

சஜித் கூட்டணியில் இணையும் மொட்டுக்கட்சியினர்
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பரந்த கூட்டணியில் இணைந்து செயற்படும் நோக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பொதுஜன பெரமுனவில் இருந்து குறித்த இருவரும் வெளியேறிய பின் அவர்கள் அங்கம் வகித்த அணியின் தலைவரான டளஸ் அழகப்பெரும இன்னும் எதிர்க்கட்சி கூட்டணியில் இணையும் நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த கூட்டணியின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, தாம் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வரவிருக்கும் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூட்டணியை விரைவாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்
சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக வேண்டும் என்று சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

மகிந்த மற்றும் ரணிலால் இணைந்து செயற்பட முடியுமென்றால், அநுர, சஜித்தால் ஏன் இணைந்து செயற்பட முடியாது?

ஒன்று சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர், அவ்வாறு இல்லாவிட்டால் அநுர ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடனேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

அதற்குச் சுதந்திர மக்கள் சபையின் ஆதரவும் வழங்கப்படும். தனித்துச் செயற்படுவதைவிட கூட்டாகச் செயற்படுவதே சிறந்தது என்றார்.

டிலானுக்கு தலைவர் பதவி
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தில், டிலான் பெரேராவின் பெயரைபாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிய,பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க வழிமொழிந்தார்.

குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், குலசிங்கம் திலீபன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, மயாதுன்ன சிந்தக அமல், கெவிந்து குமாரதுங்க, ரஜிகா விக்ரமசிங்க, இசுரு தொடங்கொட ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

#SriLankaNews-

பழிவாங்கும் படலம் ஆரம்பம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களை இலக்கு வைத்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்பிரகாரம் டலஸ் அணியில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுக்களில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் ஆரம்ப கட்டமாக டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொது நிறுவனங்கள் தொடர்பான (கோப்) குழுவின் தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் சரித ஹேரத், இம்முறை பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, நிமல் லான்சா மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் கோப் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதி அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன், டலஸ் அணியில் அங்கம் வகிக்கும் டிலான் பெரேரா மற்றும் பேராசிரியர் நாலக கொடஹேவா ஆகியோர் பொது நிதிக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அணியில் இடம்பெற்ற, மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரங்கேறும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் சபாநாயகரிடம் முறையிடப்படவுள்ளது.

#SriLankaNews

நாட்டின் தேசிய விலங்குக்கு காகம் பொருத்தம்! – மஹிந்தவுக்கு டிலான் பதிலடி
நாடு நெருக்கடியில் இருக்கும்போது மக்களின் கோரிக்கை நாட்டின் தேசிய விலங்கை மாற்றுவது அல்ல, எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் சிஸ்டத்தை மாற்றுகிறோம் என ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் தேசிய விலங்கை மாற்றுவது பற்றி முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் பல இருக்கின்றன. எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வையே மக்கள் கோருகின்றனர். தேசிய விலங்கை மாற்ற வேண்டும் என்பதல்ல, மகிந்த அமரவீரவுக்கு மர அணிலை தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் இந்த நாட்களில் காகம் அதற்கு பொருத்தமாக இருக்கும் .

ஏனெனில் இன்று இந்த நாட்டின் ஆட்சியை நடத்துவதில் காகம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மக்களின் முக்கிய பிரச்சினை தேசிய விலங்கை மாற்றுவது அல்ல. மக்கள் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியை வழங்காததாலேயே ஆகும் .

ஊழலற்ற அனாவசிய அரச செலவினங்களை கட்டுப்படுத்தும் ஜனநாயக ரீதியான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று என்ன நடக்கிறது அதை விட மோசமான நிலையை நோக்கி நாடு நகர்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

முக்கிய பதவிகளை தமிழர், முஸ்லிம்களுக்கு வழங்குக!
அமைச்சரவையை வரையறுத்து பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைத் தமிழர், முஸ்லிம்கள் இடையே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியை கொண்டு செல்ல முடியும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது டிலான் பெரேரா எம்.பி. மேலும் கூறுகையில்,

“நான் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவளித்தேன். அதற்குக் காரணம் சர்வகட்சி அரசை அமைக்க வேண்டும் என்று பலரும் விடுத்த கோரிக்கையே ஆகும். சஜித் பிரேமதாஸவே அவரின் பெயரைப் பரிந்துரைத்திருந்தார். அதற்கு முதல்நாள் வரையில் டலஸ் அழகப்பெருமவுக்கே பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்தனர். 90 வீதமானவர்கள் அந்தத் தீர்மானித்திலேயே இருந்தனர். இதன்படியே நான் வாக்களித்தேன்.

இதற்கு முன்னர் ஜனாதிபதிகள் பலரின் சிம்மாசன உரைகளைக் கேட்டுள்ளோம். அவர்கள் சட்டபூர்வமாகத் தெரிவாகிய ஜனாதிபதிகளாகும். ஆனால், அண்மையில் வேறு முறையில் அரசமைப்பு ரீதியில் வந்தார் எனக் கூறப்படும் ஜனாதிபதியின் உரையைக் கேட்டோம். அவர் சர்வகட்சி அரசு தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேசத்துக்குச் சிறந்த செய்தியொன்றைக் கூற முடியும். அமைச்சரவையை வரையறுத்து பிரதான பதவிகளை மற்றைய இனத்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளலாம். சிங்களவர் ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் தமிழர் ஒருவரைப் பிரதமராக்கலாம். ஏன் இங்கு இவ்வாறு முடியாது? அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக முடியுமென்றால் இங்கே தமிழ் பேசும் ஒருவர் பிரதமராகினால் என்ன? முஸ்லிம் ஒருவர் இங்கே சபாநாயகராகினால் என்ன? இதன்மூலம் இனவாத மனநிலையில் இருந்து விடுபட்டுள்ளோம் என்று சர்வதேசத்துக்குக் கூற முடியுமாக இருக்கும்.

புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள். இதனைச் செய்து சிறந்த செய்தியை சர்வதேசத்துக்குவே வெளிக்காட்டுங்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து எம்.பிக்களையும் உள்ளடக்கி துறைசார் மேற்பார்வை குழுக்களை அமையுங்கள்” – என்றார்.

#SriLankaNews

அமைச்சுக்களை அதிகரிப்பதற்கு முயற்சி! – டிலான் குற்றச்சாட்டு
” சர்வக்கட்சி அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

” நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்த்து, நாட்டை மீட்பதற்கான வியூகமாகவே சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும், ஆனால், அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நகர்வாகவே அது அமைந்துள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். பிரதி அமைச்சுகள் தேவையில்லை. குறுகிய அமைச்சரவை இருந்தால் போதும்.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

#SriLankaNews