Crime Branch Criminal Investigation Department – tamilnaadi.com

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 414 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் கடுமையான பாலியல் வன்முறை தொடர்பில் 192 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30 வரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 7,677 ஆகும்.

இவற்றில், 6,296 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டத்தின் கீழ் உள்ளன, மேலும் 1,381 முறைப்பாடுகள் இந்தச் சட்டத்தின் கீழ் இல்லை என்று அதிகாரசபை கூறுகிறது.

இந்த புகார்களில் அதிகபட்சமாக செப்டெம்பரில் 1,176 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 49 பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், 111 குழந்தைத் தொழிலாளர் தொடர்பானவை, மேலும் 203 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டத்தின் கீழ் வராத பிற புகார்களில், 62 இளம் வயது கர்ப்பங்கள் தொடர்பானவை. மேலும், குழந்தைகளுக்கு எதிரான சைபர் வன்முறை 102, வீட்டு வன்முறை 38, உயிர்மாய்ப்பு முயற்சிகள் 13 முறைப்பாடுகள் மற்றும் கடத்தல் தொடர்பாக ஒன்றும் கிடைத்துள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.

போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக, இந்த காலகட்டத்தில் 83 பெறப்பட்டுள்ளன, இதில் போதைப்பொருள் கடத்தலுக்கு குழந்தைகளைப் பயன்படுத்துவது தொடர்பான 27 முறைப்பாடுகளும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பான மூன்றும் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்
திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர

சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் உட்பட மூன்று பேர் நேற்று (ஒக் 28) யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியதாகத் தேடப்பட்ட பிரதான சந்தேக நபர், கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 160 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் காவல்துறையினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வந்தியின் தொலைபேசியில் என் பெயர் எவ்வாறு சேவ் செய்யப்பட்டுள்ளது? – நாமல் ராஜபக்ச நகைச்சுவைப் பதில்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் தனது பெயர் எவ்வாறு ‘சேவ்’ (சேமிக்கப்பட்டு) செய்யப்பட்டிருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அதனைப் பரிசோதித்தவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என் பெயர் பற்றி பரிசோதித்தவர்களிடம் கேளுங்கள்”: “செவ்வந்தியின் தொலைபேசியைப் பார்ப்பதற்குப் பலரும் ஆவலாக உள்ளது போல் தெரிகிறது. செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் அது பற்றிக் கேட்க வேண்டும். ‘அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது’ எனக் கூறினால் நல்லது,” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“‘மகே ராஜபக்ச’ (எனது ராஜபக்ச) என சேவ் செய்யப்பட்டதா?” என்ற கேள்விக்கு:

“சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள் தான் கனவில் கூட வருகின்றனர். அந்தக் கட்சியிலும் (NPP) நாமல் ஒருவர் இருக்கின்றார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை. நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம்.”

“பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால் தான் ‘எனது’ என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக் கூட இருக்கலாம்,” என்று அவர் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!
தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை பியூமி ஹன்சமாலியிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலி நேற்று (அக்டோபர் 21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

அவரது வாக்குமூலங்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த மேலும் பல மொடல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மேலும் பல மொடல்கள் மற்றும் நடிகைகளிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட முற்றும் அவ்வாறான கும்பல்களுடன் தொடர்பில் இருந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20-45 வயதுக்குட்பட்டவர்களாவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், துப்பாக்கி கடத்தல், உளவு பார்த்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு உதவி செய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்களில் பலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட குற்றவாளிகளுக்கு உதவி செய்து வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி! வெளியாகும் பல தகவல்கள்
கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கெஹல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மிக பொருளாதார கஷ்டத்தில் வாழ்ந்த நிலையில் தனது காதணியை அடகு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கொமோண்டோ சலிந்த,கொமோண்டோ முகாமிலுள்ள பொருளாதார கஷ்டங்களில் வாழும் வீரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை வட்சப் குழு மூலம் தொடர்பை ஏற்படுத்தி துப்பாக்கிதாரிகளாக பயன்படுத்தியுள்ளார்.

அவ்வாறு ஒருவரே கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்டவர். கெஹல்பத்தர பத்மேவின் வேண்டுகோளுக்கிணங்க செவ்வந்தி, கொமோண்டோ சமிந்துவை இந்த கொலைக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரின் நெருக்கமான உறவையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.இவ்வாறே கொமோண்டே சமிந்துவை தன்வலைக்குள் சிக்க வைத்துள்ளார்.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு செவ்வந்தி ஒரு பணம் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். தக்சியை பார்த்து வியந்த செவ்வந்தி : வெளிவரும் பல தகவல்கள்!
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த பெண்ணான நந்தகுமாரன் தக்சியை கண்டு வியப்பில் ஆழ்ந்ததாக கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிசாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை வானொலியின் இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

செவ்வந்தி நேபாளத்திற்கு செல்லும் வரை தக்சியை தெரியாதாம். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நேபாளத்தில் பிரிந்து வசித்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் இருப்பிடங்களை தெரிவித்துக் கொள்ளவில்லை.

ஆறு அல்லது ஏழு நாட்கள்  தொடருந்துகள், பேருந்துகள் மற்றும் கார்களில் செவ்வந்தியை அழைத்துச் சென்ற ஒரு இந்திய தரகரால் ஜூன் மாதம் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேபாள எல்லையில் தரகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்படும் வரை இஷாரா செவ்வந்தி நேபாளத்திலேயே இருந்துள்ளார்.

அங்கு தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், பணம் உட்பட அனைத்தும் துபாயில் இருந்த ஜே.கே.பாயால் வழங்கப்பட்டுள்ளன.

அவரது நலனை விசாரிக்க அவர் அவ்வப்போது துபாயிலிருந்து நேபாளத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜே.கே. பாயின் வேண்டுகோளின் பேரில் கே. சிவதாசன் செவ்வந்தி ஒரு மீன்பிடி படகில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நேபாளத்தில் தங்கியிருந்த காலத்தில் செவ்வந்தி தனது உடல் அழகு மற்றும் முகத்தை பொலிவாக வைத்திருக்க அழகுக்கலை நிலையங்களுக்கு அதிகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வந்திக்கு ஊடகங்கள் வழங்கிய பிரபலம்: கடுமையாக விமர்சித்த பேராசிரியர்
இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மயுர சமரகோன் (Mayura Samarakoon) கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டு இது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தனது பதிவில்,

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் வருகையை அறிவிக்க முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டன.

ஒவ்வொரு மணி நேரமும் (breaking news) அறிவிப்பு செய்தது. இஷாராவின் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என பல செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.

இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் கதைத்த காணொளிகளில் மரியாதையாக தங்கை என உரையாடியுள்ளார். ஆனால் ஸ்பாவில் வேலை செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டால் உரையாடும் பாணி கீழ்த்தரமானதாக இருக்கும்.

நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத்தெரியாது. 96ல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கொண்டுவந்த அர்ஜுனவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் நடிக்க கூடும் என விமர்சித்துள்ளார்.

கோட்டாபயவின் குற்றங்களில் நெருங்கிய தொடர்பில் முக்கிய அதிகாரிகள்: பகிரங்கப்படுத்தும் சரத் பொன்சேகா
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் கொழும்பில் ஊடவியலாளர்கள் தாக்குதல் சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்‌ச மற்றும் அவருடன் நெருக்கத்தில் இருந்த முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலே,எந்த விதாரன ஆகியோர் நேரடி தொடர்புப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

(12.10.2025) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

கோட்டாபய செய்த பல குற்றங்களுக்கு இவர்கள் தான் உதவி செய்தவர்கள். ஓய்வுபெற்ற பின்னரும் எந்த விதாரண கோட்டாபயவுடன் இருந்தார்.இவை தொடர்பில் ஆழமான விசாரணைகள் செய்தால் கண்டுபிடிக்கலாம்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகரவுக்கு இது தொடர்பான சில சாட்சியங்கள் தெரியும்.

அக்காலப்பகுதியில் கொழும்பு பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய ராஜபக்‌ச தான் கவனித்துக்கொண்டிருந்தார். மாதத்திற்கு ஒரு முறை புலனாய்வு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

நான் வடக்கு கிழக்கில் தான் இருந்தேன்.என்னையும் லசந்த கொலையில் சம்பந்தப்படுத்த பார்த்தனர். எனக்கு லசந்தவுடன் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. கோட்டாபயவுக்கு தான் இருந்தது.

மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் தகவல் வெளியிடுவதாக லசந்த தெரிவித்திருந்தார். அப்போது என்னிடம் இருந்த புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்து இந்த கொலைக்கு இராணுவத் தளபதி தான் காரணம் என காட்ட முயன்றனர். குற்றப்புலனாய்வுத்துறையினர் இது தொடர்பில் நன்கறிவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சொத்து தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சட்டவிரோத சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பான ஒரு சம்பவத்தில் வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.