Chilaw – tamilnaadi.com

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!
சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா குழுவைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட ஒரு குழு சிலாபத்திற்குச் சுற்றுலா வந்திருந்தது. இவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்றிருந்தபோது, 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, காணாமல் போன ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறை, காவல்துறை உயிர்காப்புப் பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சங்கிலியை கொள்ளையிட்ட மூன்று பெண்கள் கைது!!
பேரூந்தில் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட மூன்று கில்லாடி பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாம் தடுப்பூசியை செலுத்துவதற்காக குறித்த பெண் தமது சகோதரியுடன் பேருந்தில் பயணித்து ஹிக்கடுவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அருகில் இறங்கிய சந்தர்ப்பத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்து மூன்று பெண்கள் அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ஹிக்கடுவை போக்குவரத்து பொலிஸார் தங்கச் சங்கிலியுடன் தப்பிச்சென்ற மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள், சிலாபம், புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 20, 21 மற்றும் 40 வயதுடையவர்கள் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

#SrilankaNews

சிலாபத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
நேற்றைய தினம் சிலாபம் – குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

58 வயதுடைய குறித்த நபர் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

வீதியில் பயணித்த நபர் மீது சிலாபத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த லொறியொன்று மோதியதிலேயே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews