Chanakkiyan Rasamanikkam – tamilnaadi.com

எனக்குப் ‘புலி’ என்று முத்திரை குத்தினால் அது எனக்கு பெருமை! – நாடாளுமன்றில் கர்ச்சித்த சாணக்கியன் எம்பி
தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் ‘புலி’ என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு பெருமை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர்,

இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் எனக்கு உரையாற்றுவதற்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை. அதனை நான் மீண்டும் மீண்டும் கேட்டபோது அமைச்சர் மனுச நாணயக்கார என்னைப் புலி எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சபையில் அநேகமான உறுப்பினர்களுக்கு அவர்களது கேள்விகளை கேட்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. எனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை.

நான் கிழக்கு மாகாணத்தை நான் பிரதிநித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் எனது கட்சி சார்பாக அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வு ரீதியான பிரச்சினையொன்று அண்மைக்காலமாக காணப்படுகின்றது.

சுமார் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

மாகாணசபைகள் தற்போது இயங்குவதில்லை. இவ்விடயம் தொடர்பாக மாகாண ஆளுநரும் அது தொடர்பில் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார். அவர் ஒரு இனவாதியைப் போலவே செயற்பட்டு வருகின்றார்.

சிங்கள மக்களின் காவலர் என்ற இனவாத போக்கிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செயற்பட்டு வருகின்றார். போக்குவரத்து பிரச்சினையை அந்த மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று இந்த சபையில் போக்குவரத்து அமைச்சரிடம் அது தொடர்பிலான கேள்வியை முன்வைத்தேன்;.

நான் முன்வைத்த பிரச்சினை என்பது உணர்வு ரீதியான பிரச்சினை இல்லை என்று பிரதிசபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் அது உணர்வு ரீதியிலான பிரச்சினையாக இருக்கும். நான் எனது மக்களின் பிரச்சினையை சபைக்கு எடுத்துக்கூறும் எனது ஒலிவாங்கியை நிறுத்துகின்றனர். ஒரு அமைச்சரவை அமைச்சர் என்னை புலி என்று அழைக்கின்றார். என்னை இனவாதி என்று அழைக்கின்றார்கள்.

வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இந்த சபையில் மறுசீரமைப்பில் சம்பியன் என்று அவர்கள்; தங்களைப் புகழாரம் சூட்டிக்கொள்கின்றார்கள். அண்மையில் தென்னாபிரிவுக்கு இன்பச் சுற்றுலாவை மேற்கொண்டு நல்லிணக்கம் தொடர்பிலான கற்றலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

நல்லிணக்கம் தொடர்பில் கற்றுவந்த அமைச்சர் அலி சப்ரி, நான் எனது மக்கள் குறித்து கூறும் போது அதனை அலட்சியப்படுத்துகின்றார். எனது மக்களின் பிரச்சினையை இந்த பாராளுமன்றத்தில் கூறுவதால் எனக்கு புலி என்று பெயர் வைப்பார்களேயாயின் அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன். என்னை புலி என்று நீங்கள் கூறுங்கள். ஆட்சேபனை இல்லை.

தமிழ் மக்களது பிரச்சினையை பேசும் போது அதற்கு நீங்கள் புலி என்று முத்திரை குத்துவீர்களேயாயின் அதுவே எனக்கு பெருமை – என்றார்.

#SriLankaNews

பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம்
பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை ”புலி”என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியதால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினா நேரம் இடம்பெற்றபோது, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அதன்போது, சாணக்கியன் எம்.பி, கேள்வி எழுப்ப முயன்றபோது நேரம் போதாது என்று கூறிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அனுமதி மறுத்தை அடுத்து, இரு நிமிடங்கள் தருமாறு சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தவே சுருக்கமாக கேள்வியை கேட்குமாறு பிரதி சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

“கிழக்கு மாகாண ஆளுநர் ஓர் இனவாதி, கிழக்கு மாகாண சிங்களவர்களின் பாதுகாவலாராகவே அவர் தன்னை நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன?”என்று சாணக்கியன் எம்.பி கேள்வியெழுப்பினார்.

அப்போது நேரம் முடிவடைந்து விட்டதாக பிரதி சாபாநாயகர் கூறிய நிலையில், “காலையிலிருந்து அனைவருக்கும் நேரத்தை தாராளமாக வழங்குகின்றீர்கள், ஆனால் தமிழன், கிழக்கு மாகாணத்தவன் என்பதனால் எனக்கு அனுமதி மறுக்கின்றீர்கள்” என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

இதனையடுத்து, பிரதி சபாநாயகருக்கு சாணக்கியனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது “என்னை நீங்கள் உரத்துப்பேசுவதன் மூலமாகவோ அச்சுறுத்தியோ அடிபணியவைக்க முடியாது” என்று பிரதி சபாநாயகர் அடுத்த கேள்விக்கு சென்றார்.

எனினும் சாணக்கியன் எம்.பி. விடாப்பிடியாக கேள்வி கேட்க வேண்டும் என கூச்சலிடவே, “அமைச்சர் பந்துல இணங்கினால் மட்டும் தான் உங்கள் கேள்விக்கு அனுமதி வழங்கப்படும்“ என்று பிரதி சபாநாயகர் தெரித்த நிலையில், சாணக்கியனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் பந்துல மறுத்தார்.

இந்நிலையில் அடுத்த கேள்விக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதிலளிக்க முற்பட்டபோது சாணக்கியன் எம்.பி. தொடர்ந்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் அமைச்சர் மனுஷவுக்கும் சாணக்கியனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.

சாணக்கியனைப் பார்த்தது “நீங்கள்தான் இனவாதி. நாம் வடக்கு, கிழக்கு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. நீங்கள்தான் நான் கிழக்கு மாகாணத்தவன் என இனவாதம் பேசுகின்றீர்கள். புலி வெளியே பாய்ந்து விட்டது. புலியின் உண்மை முகம் வெளிப்படுகின்றது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உங்களைப் போன்றவர்கள்தான் தடையாக இருக்கின்றார்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்” என அமைச்சர் மனுஷ கூறினார்.

இதன்போது எழுந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எம்.ஏ .சுமந்திரன் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.

அதில்“சாணக்கியன் எம்.பி.யை அமைச்சர் மனுஷ நாணயக்கார புலி என்கின்றார். மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. “புலிகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். சாணக்கியனை புலி என்று அவர் கூறுவதனை நீங்கள் அனுமதிக்கின்றீர்களா?” எனக்கேட்டார்.

இதன்போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில் புலி என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்ததை அடுத்து, அவ்வாறான வார்த்தைப்பிரயோகத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

#SriLankaNews

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு!!!
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்பு!!!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்குமூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக நாங்களும் இறந்த உறவுகளுக்கு நீதி வேண்டும், சதி செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒரு புறம் நாங்கள் அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் கூட, இது அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குண்டுத்தாக்குதல் என்பதை பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையிலே அசாத் மௌலானா என்று அழைக்கப்படும் அவரது முன்னாள் பேச்சாளர் இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னால் ராஜபக்ஷர்கள் இருந்ததாகவும், இந்தக் கொடூரமான செயலை செய்ததற்கு பின்னால் தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் தொடர்பு இருப்பதாக ஐ.நாவிலே அறிக்கை கொடுத்திருக்கின்றார்.

ஆனால், இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்” – என்றார்.

#SriLankaNews

வடக்கு கிழக்கு மக்களையே அரசு பழிவாங்குகின்றது!!
சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களையே இந்த அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘உண்மையிலேயே இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல எங்களுடைய வடக்குக் கிழக்கிலே இருக்கும் அனைத்து மாவட்டங்களிலுமே நல்லாட்சி காலப்பகுதியிலே அந்த நேரத்திலே வீடமைப்பு அதிகார சபைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ பல வீடு திட்டங்களை இந்த வடக்குக் கிழக்கிலே வந்து ஆரம்பித்திருந்தார்.

உண்மையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கமானது மாறிவிட்டதுக்கு பிறகு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழே சஜித் பிரேமதாஸவின் அமைச்சின் கீழே வழங்கப்பட்ட வீடுகள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இந்த வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு இந்த வீடு திட்டங்களை முடிக்காமல் இருப்பதன் ஊடாக உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களை தான் நீங்கள் பழிவாங்குகின்றீர்கள்.

ஏனென்றால் உங்களுக்கு தெரியும் 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் எத்தனையோ அமைச்சர்களிடம் இந்த கேள்விகளை நாங்கள் கேட்கும்போது கூட ஒவ்வொரு அமைச்சரும் இதை நாங்கள் முடித்து தருவோம் நிதி கிடைத்தால் முடித்தருவோம் என கூறுகின்றோம்.

நிதியை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தினுடைய பொறுப்பு. வீடமைப்பு அதிகார சபைக்குரிய நிதி கிடைக்கும் பட்சத்தில் ஆறு மாதத்திற்குள் நாங்கள் முடிப்போம் என்று சொல்வதானது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பதில்.

இந்த வீடுகள் லிண்டர் மட்டத்திற்கு கட்டினால் 5 லட்சம் ரூபாய், கூரை போட்டால் 10 இலட்சம் ரூபாய் என கூறியமைக்காரணமாக பல மக்கள் இன்று கடனாளியாக மாறி இருக்கிறார்கள்.

இந்த வீடு தொடர்பான விடயங்களை சார்ந்த கௌரவ அமைச்சரிடம் முன்வைக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும் போது தயவு செய்து நீங்கள் மட்டக்களப்பில் இருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோரை மட்டும் நீங்கள் கூப்பிட்டு பேசாமல், நீங்கள் எதிர்க்கட்சியிலே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

உடன் நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை முடக்குவோம்! – தொல்பொருள் திணைக்களத்துக்கு எச்சரிக்கை
தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது.

இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த நாட்டுக்குள்ளே மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள்.

வெடுக்குநாரி மலையிலே ஒரு குழப்பம், குருந்தூர் மலையிலே ஒரு குழப்பம், குசலான மலையிலே ஒரு குழப்பம், அரிசி மலையிலே ஒரு குழப்பம், தற்போது திருகோணமலை புல்மோட்டையிலே ஒரு குழப்பம்.

இந்த நாட்டினுல் ஐ.எம்.எப் ஒப்பந்தம் வந்தாலும் சரி உங்களைப் போன்ற இனவாதிகள், உங்களைப்போன்ற இனவாத அமைச்சர்கள், இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு, வடக்கு கிழக்கில் எங்களுடைய காணிகளை சுவீகரிக்கின்றீர்கள்.

தொல்பொருள் செயலணி என்பது தொல்பொருளை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால் தொல்பொருள் என்ற போர்வையில் ஏன் பௌத்த பிக்குகள் வர வேண்டும். ஏன் அதிகாரிகள் இல்லையா?

சோறுக்கும் தண்ணிக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், ஐ.எம்.எப் மட்டும் இல்லை எவறாலும் இந்த நாட்டை காப்பாத்த முடியாது.

இந்த தொல்பொருள் செயலணியும், தொல்பொருள் திணைக்களமும், நீங்களும், இந்த அரசாங்கமும் இனவாதத்திற்காகவே இதனை பயன்படுத்துகின்றீர்கள்.

இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை நாங்கள் முடக்குவோம். உங்களைப்போன்ற இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதவாறு முடக்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

ஆளுநரின் அணிக்கு எதிராக குரல் கொடுங்கள்! – சாணக்கியனுக்கு கடிதம்
இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நிறுத்தக் குரல் கொடுக்குமாறு கோரி ஏறாவூரிலுள்ள மஸ்ஜிதுர் றிபாய் பள்ளிவாசல் நிருவாகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்  சாணக்கியனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புன்னைக்குடா வீதி” என்ற பெயருடன் பயன்படுத்தப்படும் இவ்வீதியானது ஏறாவூர்; நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் ஆரம்பித்து சுமார் 5.23 கிலோமீற்றர் நீண்டு சென்று புன்னைக்குடா கடற்கரையில்

முடிவடைகின்றது.

இவ் வீதி அமைந்துள்ள பிரதேசம் முழுவதிலும் 99 சதவீதமாக தமிழ் முஸ்லிம் மக்களே நிறைந்து வாழ்கின்றனர்.

இவ் வீதிக்கு பெயரிடக்கூடிய எத்தனையோ தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த போதிலும் இதில் யாரேனும் ஒரு தனிநபரின் பெயரைச் சூட்டுவதன் மூலம் ஓர் இன மக்கள் மனம் நொந்து கொள்வார்கள் என்பதால்; பொதுவான “புன்னைக்குடா வீதி” என்ற பெயரையே மிக நீண்டகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையின் வரைபடத்திலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கால காணி உறுதிகளிலும் இவ் வீதி புன்னைக்குடா வீதி என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தென்பகுதியைச் சேர்ந்த சுனில் ஆரியபால என்பவரின் தலைமையில் சிலர் ஒப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் மிகப் பழைமை வாய்ந்த புன்னைக்குடா வீதி என்னும் பெயரை எல்மிஸ் வல்கம “Elmis Walgama” என பெயர் மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரும் இதனைக் கவனத்தில் கொண்டு சில தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆளுநரின் செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே தயவுசெய்து தாங்கள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி, இப்பகுதியில் இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் இவ் வீதிப் பெயர்மாற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி தொடர்ந்தும் புன்னைக்குடா வீதி என்னும் பெயரிலேயே இவ்வீதி அழைக்கப்படவும், சகல இன மக்களின் நல்லுறவு பேணப்படவும் வழிசமைக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கடிதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3) பயங்கரவாத தடைச்சட்டத்துக்கான மாற்றீடு பயங்கரமானது

எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரம்பும்நிலையங்களுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை இரவுவேளையில் திடீரென முளைத்த வரிசை, ஒருசில மணிநேரத்துக்குள் காணாமற்போய்விட்டது. சிலோன் பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

அதனையடுத்தே இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது. தொழிற்சங்க போராட்டத்தால், கொலன்னாவையில் அமைந்துள்ள சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனைத்தில் இருந்து பௌசர்கள் வெளியேறவில்லை.

வெற்று பௌசர்களும் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நீண்ட விடுமுறை நாட்களில் தாங்கள் சிக்கிக்கொள்வோமென பலரும் சிந்தித்தனர். முன்கூட்டியே எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கத்தொடங்கிவிட்டனர்.

எனினும், இராணுவத்தை அதிரடியாக களமிறக்கிய அரசாங்கம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்தது. எரிபொருள்களும் சீராக விநியோகிக்கப்பட்டன.

போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முடக்குவதற்காக இராணுவம் களமிறக்கப்பட்டமை இது முதல் தடவையல்ல. இந்நிலையில்தான், வீதிக்கு இறங்குவோரை பயங்கரவாதிகளாவும், போராட்டங்களில் ஈடுபடுவோரை அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்வோர் என்றும் சித்திரிக்கும் வகையிலான

நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்ளை முன்வைத்துள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதையே ஐ.நா வலியுறுத்தியிருந்தது, எனினும், அதில் திருத்தங்களை  மேற்கொண்டிருக்கும் அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயங்கரமானதென இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்..

வீதியில் இறங்குவோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பியின் உறுப்பினருமான விஜித ஹேரத், இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளன.

இந்த சட்டம் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை எனினும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான தீர்மானங்களையே அரசாங்கம் எடுத்துள்ளது. கடமைக்கு சமூகமளிக்க தவறிய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் அன்மையில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போராட்டங்களை முன்னெடுப்பதற்கு சகலருக்கும் உரிமையுண்டு, எனினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் யாராவது செயற்படுவார்களாயின் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கவும்

தயங்கமாட்டேன் என எச்சரித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் செயற்றிட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் நாட்டு வளங்கள் தொடர்பிலான சந்தேகம் வலுப்பெற்றுள்ளதென எச்சரித்துள்ளன.

காலவோட்டத்துக்கு ஏற்றவகைளில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். எனினும், அவை ஜனநாயகரீதியிலான போராட்டங்களை நசுக்கி, ஒடுக்குவதாய் அமைந்துவிடக்கூடாது என்பதே எமது வலியுறுத்தலாகும்.

#SriLankaNews

கூட்டத்தில் அமைதியின்மை – பெண் மருத்துவமனையில்!
ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட  களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை வியாழக்கிழமை (30)  முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட  களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி துமளியைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் எம்.பி ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ட அபிவிருத்திக்குழு கூட்டம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் காலை 9 மணிக்கு வாகரை பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு, வாகனேரியில் சூரிய மின்சார திட்டத்துக்கு 352 ஏக்கல் வயல் காணியை அபகரிப்பு, மயிலத்தைமடு மேச்சல் தரை காணி அபகரிப்பு போன்ற பல்வேறு காணிகளை அபிவிருத்தி என்ற பேர்வையில் அபகரிப்பை நிறுத்த கோரி பொதுமக்கள் மாவட்ட செயலக்குக்கு முன்னால் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து ஒன்று திரண்ட பொதுமக்களுடன் இரா.சாணக்கியன் எம்.பி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை நோக்கி ஆர்பாட்ட பேரணியாக சென்ற நிலையில் அவர்களை காரியாலய பகுதிக்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதன் போது அதனை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உட் செல்ல முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட நிலையில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனையும் மீறி மாவட்ட செயலக பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள் நுழைந்தையடுத்து அங்கு பற்றநிலை ஏற்பட்ட நிலையில், மாவட்ட செயலகத்துக்குள் உள் நுழையும் கோட்டை கதவையும் மூடிய பொலிஸார் உட்செல்ல விடாது தடுத்தால் கதவின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு கடமைக்கு மேலதிக பொலிஸார் வரவழைத்து பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கூட்டத்துக்கு வருகை தந்திருந்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆர்ப்பாட்ட காரருடன் இணைந்து ஆர்பாட்த்தில் ஈடுபட்ட நிலையில்  கூட்டத்துக்கு வருகை தந்திருந்த சில அதிகாரிகள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊத்தியோகத்தர்கள் காரியாலயத்துக்கு செல்லவோ காரியாலத்தில் இருந்து வெளியேற முடியாமல் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசாங்க அதிபருடன் பொலிஸார் கலந்துரையாடி நிலையில் கூட்டத்துக்கு செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,  இரா.சாணக்கியன் எம்.பி மற்றும் அதிகரிகள் மற்றும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை உட்செல்ல அனுமதித்தனர்.

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காணி தொடர்பாக அரசாங்க அதிபரிடம்  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வினவியபோது,  காணி குறித்து எங்களுக்கு தொடர்பில்லை அது பிரதேச செயலகங்களிடம் கேட்குமாறு தெரிவித்ததையடுத்து அவர் பல வாதப் பிரதாபங்களின் மத்தியில் இங்கு மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்று தெரிவித்து கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் இடை நடுவில் வெளியேறினார்.

இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழு தலைவருமான சி.சந்திரகாந்தனிடம் காணி அபகரிப்பு தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வாக்குவாதத்தில்  இரா.சாணக்கியன்  ஈடுபட்டார்.

அபிவிருத்திகுழு தலைவர், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை  அவமதித்து பேசியதுடன் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து இரா.சாணக்கியன் இடைநடுவில் அங்கிருந்து வெளியேறி வெளிநடப்பு செய்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பகல் 11.30 மணிக்கு கலைந்து சென்றனர்.

#SriLankaNews

அரசின் கைக்கூலியாக டக்ளஸ்!!
வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை முரண்பாடுகளை   தீவிரப்படுத்தும்  வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகிறார்  என இலங்கை தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன்  குற்றம்சாட்டினார்.

இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம்  முயற்சிக்கிறது.அதன் ஒரு முயற்சியாகவே டக்ளஸ் செயற்படுகின்றார் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார வாகனச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் கட்டளைகள் மீதான விவாத்தில் உரையாற்றும்  போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள்.அரசின் தவறான தீர்மானங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம்,கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்,ஆனால் வடக்கு மாகாண விவசாயிகளிடமிருந்து 40 முதல் 60 ரூபாக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரின் முறையற்ற செயற்பாடுகளினால் கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரை பகுதியில் மாடுகள் வெட்டியும்,சுட்டும் கொல்லப்படுகின்றன.இவற்றை பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு , கிழக்கு மாகாணங்களின் மீன்பிடி கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும்,இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை , முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகின்றார்

.இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்கு இந்தியா குரல் கொடுப்பதால் மீனவர் பிரச்சினை ஊடாக இரு நாட்டு தமிழர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது,அதற்கு சார்பாக கடற்றொழில் அமைச்சர் செயற்படுகிறார்.இவ்வாறானவர்களை யாழ்ப்பாண மக்கள் இனிமேல் தேர்தலில் தெரிவு செய்யக்கூடாது என்றார்.

#SriLankaNews

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணையுங்கள்!!
உள்ளக சுயநிர்ணய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய தீர்வை நோக்கி பயணிப்பதற்கும் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“தமிழர்களுக்கு இருள் நாள் பெப்ரவரி நான்கு எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரித்தானியர்கள் தமிழர்களின் தலையெழுத்தினை சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றதால் தான் இன்று பாரிய நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம்.

வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் எமக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக செயலில் இறங்க வேண்டிய காலம் அண்மித்துள்ளது.

நாட்டில் இருந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை இந்த பெரும்பான்மை அரசாங்கமே தனிச் சிங்கள சட்டத்தினைக் கொண்டு வந்து நாட்டை விட்டு வெளியேற்றியது என்பதே உண்மையாகும்.

ஆனால் தற்போது தென்னிலங்கையில் இருந்து பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறுவது குறித்து குரல் கொடுக்கின்றனர்.

அவர்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமே தற்போது மறுக்கப்பட்ருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கு தொடர்ந்தும் பொருளாதார அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டன. மறுக்கப்பட்டும் வருகின்றன.

நாட்டிற்று பெரும் அந்நியச் செலாவணியினைப் பெற்றுத் தரும் மலையக மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை நாட்டிற்கு மிகப்பாரியளவில் அந்நியச் செலாவணியினை மலையக மக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அத்துடன் கிழக்கின் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் பல தற்போது பெரும்பான்மையினத்தவர்களுக்கு பறித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தின் வடிவங்கள் மாறினாலும் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியிலான போராட்டத்தினை தமிழரசுக்கட்சி ஆரம்பித்திருக்கின்றது.

இதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

எமக்கான இலக்கினை எப்போதும் மாற்றப்பேவதில்லை. தொடர்ந்தும் எமது இலக்கினை அடைவதற்கான வழிகளில் பயணிப்போம்.

தமிழர்கள் இன்று இழந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழரசுக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்பதை நாம் உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான மாற்றும் பாதையில் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பயணிக்கும்.

வெறுமனே நாம் பேசிக் கொண்டிருக்காமல் இந்த ஆண்டின் இறுதிக்குள் எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம் – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது! – சாணக்கியன்
வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் தவறானவர்களைத் தெரிவுசெய்து மக்கள் தாம் செய்த தவறினை நிவர்த்தி செய்வதற்கான முதலாவது சந்தர்ப்பமாக இந்த தேர்தல் இருக்கின்றது.

ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திற்கும் இந்த பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு இந்த தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக எமக்கு அமைந்திருக்கின்றது.

எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தினை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கையில் ஈடுபடுமாக இருந்தால் அது மக்களது ஜனநாயக சுதந்திரத்தில் கைவைக்கும் நிலைப்பாடு ஆகும்.

ஆனால் அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் பின்னிற்க மாட்டோம்.

எனவே நாம் எமது தேர்தல் வெற்றிகளை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு அனைவரும் தமிழரசுக்கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். எமது வேட்பாளர்களை நாம் தேடித் தேடி தெரிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் எமது வேட்பாளர் பட்டியலில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கல்வி மான்களே உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

எமது கட்சியில் எந்தவொரு ஊழல் மோசடி, கொலைக் குற்றச்சாட்டு மற்றும் மண் மாபியாவில் ஈடுபட்டவர்கள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப்போல் கொலைகாரர்களை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் தலைநகரம் கொழும்பிலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் இந்த நாட்டிலே எவருக்குமே சுதந்திரமில்லை. ஆனால் இம்முறை சுதந்திரதினத்தை இந்த நெருக்கடியான சூழலிலும் கொண்டாடித் தீர வேண்டுமென ஜனாதிபதி நிற்கின்றார். ஏனெனில் மக்கள் சுதந்திர தினத்தினை மறந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறுகின்றார். நாட்டில் வாழும் எவருமே இன்று பொருளாதாரச் சுதந்திரம் உள்ளிட்ட எந்தவிதமான சுதந்திரத்தினையும் அனுபவிக்கவில்லை. அது தமிழர்களுக்கும் இல்லை. முஷ்லிம்களுக்குமில்லை. ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி உள்ளிட்ட தவறுகளால் நாட்டு மக்களுக்கு தற்போது பொருளாதார சுதந்திரம்கூட மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமலிருக்கின்றனர்.

எனவே நாம் கிழக்கில் கறுப்புச் சுதந்திர தினத்தினை அனுஷ்டிப்பதற்குத் தயாராகி வருகின்றோம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு அரசியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்துள்ளதைக் காண்கின்றோம். எனவே இந்தமுறை சுதந்திர தினத்தில் நாம் எமது பாரிய எதிர்ப்பினை கிழக்கில் வெளிப்படுத்துவதற்குத் தயாராகி வருகின்றோம்.

எனவே சர்வதேசத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறும் முக்கிய தினமாக பெப்ரவரி நான்காம் திகதி நாம் முன்னெடுக்கவிருக்கின்ற இந்த கறுப்புச் சுதந்திர தின எதிர்ப்பு நாள் அமைய வேண்டும்.

தமிழர்களின் விடயங்களைக் கையாளும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுக்கு நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மூலம் இன்னமும் எமக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும், சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு வருகின்றன என்பதனை பலமாக நாம் எடுத்துக்கூற வேண்டும்.

நாம் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெறுவதற்காகவே என்பதை சர்வதேசத்திற்கும் சிங்கள பெரும்பான்மையினத்திற்கும் எடுத்துக்கூறவேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழரசுக் கட்சியினை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் மக்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews