Central Bank Officers Salaries Of Increased – tamilnaadi.com

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்:வெளியான அறிக்கை
இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்:வெளியான அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு தனது அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி 50 வீதத்தினால் சம்பளத்தை உயர்த்திய விதம் தவறானது மற்றும் ஒழுக்கமற்றது என்று வெளிப்படுத்தியுள்ளது.

சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன் நாட்டின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

பெரு வங்கிகளின் உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளை ஒரே கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வருவது தவறு எனவும், தனிநபர் அடிப்படையில் கூட்டு ஒப்பந்தத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

தினேஷ் வீரக்கொடி தலைமையிலான இந்தக் குழுவில் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சுதர்மா கருணாரத்ன, நிஹால் பொன்சேகா, அனுஷ்கா எஸ். விஜேசிங்க, அர்ஜுன ஹேரத் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் கே.வி.சி.தில்ரக்ஷி ஆகியோர் அங்கம் வகித்தனர்.

மத்திய வங்கியின் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் நாட்டிலுள்ள ஏனைய ஊழியர்களுக்கு நிகராக இருக்க வேண்டும் எனவும், மத்திய வங்கியில் பணியாற்றியதற்காக அவர்களுக்கு தனியான சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாது எனவும் குழு கூறியுள்ளது.

இதேவேளை,மத்திய வங்கியின் எழுபது வீத சம்பள அதிகரிப்பை அடுத்த வருடம் வரை இடைநிறுத்துவதற்கு குழு பரிந்துரைத்துள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், ஊழியர் சேமலாப நிதியத்தில் மத்திய வங்கி ஊழியர்களுக்கு அதிக வட்டி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை அந்த நிதியத்தால் வழங்கப்பட்ட சலுகைகளை சரி செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற நிதிக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அனைத்து ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்து அறிக்கை தருமாறு நாடாளுமன்ற நிதிக்குழு மத்திய வங்கியின் நிர்வாக சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநர் மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, மீளாய்வுக்கு பின்னர், நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் மத்திய வங்கி அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றது.

எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்மொழிந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை எனவும் மத்திய வங்கியின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய வங்கி ஆளுநர் தனிப்பட்ட முறையில் அவ்வாறான பிரேரணை எதனையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை
நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றதாக எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தியபோது அதனை மேற்கொள்ள இடமளிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களின் சம்பளத்தை 70 வீதமாக அதிகரித்துக்கொண்டுள்ளது.

இவ்வாறான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு சட்டத்துக்கு முரணானதாகும்.

நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுத்துகின்றன.

மத்திய வங்கியில் தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடனுக்கு நூற்றுக்கு ஒரு வீதமே அறவிடப்படுகின்றது.

ஆனால் நாட்டின் ஏனைய சாதாரண மக்கள் வங்கிகளுக்கு சென்று கடன் பெற்றால் அவர்களுக்கு வட்டி நூற்றுக்கு 20.5 வீதமாகும். அதனால் தான் மத்திய வங்கிக்கு சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட போது, அதில் ஓரளவு சுயாதீனம் வழங்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம்.

அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்றத்துக்கு இவர்கள் வந்தபோது, அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்டதற்கு, கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே இதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் மத்திய வங்கி, மத்திய வங்கி தொழிற்சங்கங்களுடன் அவ்வாறான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதா என எமக்கு தெரியாது. ஆனால் தொழில் திணைக்களத்தில் அவ்வாறான ஒன்று பதிவு செய்யப்பட்டதில்லை.

மத்திய வங்கியும் மத்திய வங்கி தொழிற்சங்கங்களும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்குத் தொழில் ஆணையாளரின் அனுமதி பெற்றுக்கொண்டிருக்காவிட்டால், அது சட்ட பூர்வமானதல்ல. அப்படியானால் சம்பள அதிகரிப்பு சட்ட ரீதியானதல்ல.

அத்துடன் நாட்டில் ஏனைய திணைக்களங்களான பெற்றொலியம், துறைமுகம், மின்சார சபை எனப் பல நிறுவனங்கள் அதன் நிர்வாக அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொண்டு பதிவு செய்துகொண்டுள்ளவர்களுக்குக் கூட தங்களுக்கு தேவையான முறையில் சம்பள அதிகரிப்பு செய்துகொள்ள இந்த அரசாங்கம் இடமளிப்பதில்லை.

அத்துடன் வாழ்வதற்கு வழியில்லை என தெரிவித்து 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தொழிற்சங்கங்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தின. ஆனால் அந்த போராட்டக்காரர்களுக்கு கண்ணீர்ப் புகை அடித்து விரட்டினார்கள்.

ஆனால் நூற்றுக்கு 60,70 என மத்திய வங்கி தங்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது. அதனால் இவ்வாறான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலட்சங்களில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்
இலட்சங்களில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்

அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய துறைகளில் சம்பளம் திருத்தப்பட வேண்டுமென மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் சம்பள திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே தொழிற்சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், உரிய சம்பள திருத்தம் நடைபெறவில்லையென்றால், மத்திய வங்கியின் எஞ்சியிருந்த கணிசமான அதிகாரிகளும் மத்திய வங்கியை விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் மத்திய வங்கியில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சுமார் நூறு அதிகாரிகளை நாம் இழந்துள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் உலக வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இங்கிலாந்து வங்கி மற்றும் காமன்வெல்த் செயலகம் உட்பட பல சர்வதேச நிறுவனங்களில் சேவையில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி ஊழியர்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வு வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும், அவர்களின் தொழில் தகைமைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட வருமானத்தை உருவாக்குவதைத் தடுக்கும் சட்டத் தடைகள் மற்றும் பிற வரம்புக் காரணிகள் இருப்பதாகவும் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் தற்போது நிலவும் வரிச்சுமை காரணமாக சில தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதன்மூலம் சம்பளம் திருத்தப்பட வேண்டுமெனவும் சங்கம் வலிறுயுத்தியுள்ளது.

மேலும், அனைத்து தொழிற்சங்கங்களும் மத்திய வங்கி குழுவும் 2024-2026 கூட்டு ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிய கடமைப்பட்டிருப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.