casurina beach – tamilnaadi.com

காரைநகரில் வெளிநாட்டு பெண் பயணியுடன் சேட்டை! – குற்றவாளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர்.

அதன் போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான் , மூன்று குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500 ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார்.

#SriLankaNews

வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் ! – 10 பேருக்கு மறியல்
சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு நேற்று (22) மாலை சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்பகுதியில் மதுபோதையில் இருந்த 10 இளைஞர்கள் குறித்த இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து சிரமத்துடன் தப்பிச்சென்ற இருவரும் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிசார் 10 இளைஞர்களையும் கைதுசெய்தனர்.

அவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களில் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் 10 இளைஞர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

#SriLankaNews

கசூரினா கடற்கரையில் வெளிநாட்டு பெண் துன்புறுத்தல்! – 10 பேர் கைது
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரைக்கு ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைதுசெய்தனர்.

அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

கசூரினா கடலில் நீராடியவர் மாயம்! – தேடுதல் பணி தீவிரம்
யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனை தேடும் பணிகள் மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல்போன இளைஞன் கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியிலிருந்து காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்ற 20 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கரைக்கு ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றொருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews