C.V.Vikneswaran – tamilnaadi.com

அரசாங்கத்தை பயணக் கைதியாக்க முயற்சி!
” நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங்கத்தை பணயக் கைதியாக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிடுவதற்கு தயாராகவே உள்ளனர், அது நடக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்க் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா டயஸ்போரா என்பதற்குள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களும் உள்ளனர். இந்த அரசாங்கம்மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஊழல் ஆட்சியெனில் எவரும் முன்வரமாட்டார்கள் என்பதையும் ஏற்றாக வேண்டும். இந்த அரசாங்கம்மீது நம்பிக்கையின்மையால் முதலிட எவரும் முன்வர விரும்புவதில்லை. சாதாரணமாககூட பணம் அனுப்பமாட்டார்கள்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார். அரசாங்கத்தை பணயக் கைதியாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றார். பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கமுடியாது. பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் அரசியல் காரணிகளையும் அனுமதிக்க முடியாது. இது விடயத்தில் நிதிக்காக அரசாங்கமும் அடிபணிந்துவிடக்கூடாது.

அதேவேளை, இராணுவ குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற ஜெனிவா யோசனையும் ஏற்புடைய விடயம் அல்ல. அதனை ஏற்க முடியாது. இராணுவ பலத்தை எண்ணிக்கையும் மதிப்பிடக்கூடாது. இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துதான் கணக்கிட வேண்டும். இலங்கை இராணுவம் இன்னமும் தொழில்நுட்பம் ரீதியில் மேம்படவில்லை. எனவே, படைகுறைப்பு யோசனை ஏற்புடையது அல்ல.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை. ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். அது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தலாம். இதனை போர் முடிந்த கையோடு செய்யாததாலேயே பிரச்சினை ஏற்பட்டது ” – என்றார்.

#SriLankaNews

சர்வகட்சி அரசில் இணைந்தால் ‘விக்கி கோ கொழும்பு’ உருவாகும்!
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் ‘விக்கி கோ கொழும்பு’ என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்தார்.

தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எழுத்து மூலம் செய்யப்பட்ட உறுதிப்பாடுகள் மனதால் இணைந்த உறுதிப்பாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். தற்போதைய அரசோ நிலையற்ற அரசு. இந்த அரசால் எந்த ஒரு பிரச்சினையையுமே தீர்க்க முடியாது. குறைந்தது தற்போதுள்ள பொருளாதார பிரச்சனையை கூட தீர்க்குமா என்பதே கேள்விக்குறி.

தற்போதைய அரசும் சிங்கள பௌத்த விடயங்களை பாதுகாக்கின்ற ஒன்றே. எழுத்து மூலமான ஒப்பந்தங்களோ வாய் மூலமான ஒப்பந்தங்களோ அவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே அன்றி அதனால் இந்த பலனும் கிடையாது.

எமது கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் தற்போதைய அரசாங்கத்தில் இணைய மாட்டார் என முழுமையாக நம்புகின்றோம். ஆனால் அவர் அரசாங்கத்தில் இணைவாரா இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாமலே இருக்கின்றோம்.

அவர் எடுக்கின்ற முடிவுகள் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாகவோ அல்லது பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதாகவோ அமையவில்லை என்பது மன வருத்தத்துக்குரிய விடயம். ஆனாலும் அவ்வா ஆனாலும் ஒரு துரதிஷ்டமான ஒரு முடிவு ஏற்படாது என்றே நாம் நம்புகின்றோம்.

ஆனால் தன்னிச்சையான முடிவை எடுத்து ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் விக்கி கோ கொழும்பு என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் – என்றார்.

#SriLankaNews

அணையப்போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை! – கூறுகிறார் விக்னேஸ்வரன்
அணையப்போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை ராஜபக்ஷவினர் உருவாக்கியிருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமகால நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷவினர் நேர்மையான விதத்தில் தமது பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. இந்த பதவி மூலமாக கோடான கோடியை சம்பாதித்து இருக்கின்றார்கள்.

அணையப்போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறையை உருவாக்கியிருக்கின்றார்கள்.

யார் மேல் குற்றத்தை சுமத்தப்போகின்றார்கள் என்பது தான் முக்கியம். கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கு நடைபெற்றது. சிங்களவர்களுக்கு நடைபெறுகிறது. அதை நாம் முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பிரதமர் பதவி விலகிய பின்னர் தேசிய அரசாங்கம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது ,

தேசிய அரசாங்கமொன்று கோட்டாபய ராஜபக்ஷவினுடைய தலைமையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் அவருடைய ஆட்சியைத்தான் வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான ஒருவரை தலைவராக வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை நிறுவ முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

அவ்வாறு உருவானாலும் நாம் எந்தவிதமான பதவிகளை ஏற்பதாக இல்லை . எங்களை பொறுத்தவரை சில முக்கியமான விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

தொல்லியல் திணைக்களம் சம்பந்தமான ஆணைக்குழு வாபஸ் பெறப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் இராணுவத்தினரை நன்றாகக் குறைக்க வழிவகை செய்தல் போன்ற கோரிக்கைகளை ராஜபக்ஷ அல்லாத அரசியல் தலைவர் எழுத்து மூலமாக உத்தரவாதம் தருவராக இருந்தால் நாங்களும் பங்கு பெற முடியுமா என்பது பற்றி அந்த நேரத்தில் யோசித்து முடிவெடுக்க முடியும் – என்றார்.

#SriLankaNews

தென்னிலங்கை போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல! – அமெரிக்க தூதரிடம் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
இராணுவத்தினர் பலவிதமான பொருளாதார நடவடிக்கைகளில் அங்கு மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் தமக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தை அமெரிக்க தூதருக்கு எடுத்து கூறியதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்திருக்கலாம். ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை மட்டும் அழைத்திருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் இணைந்து பேச்சினை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் ஏதாவது நன்மை தீமைகள் பெற்றுள்ளீர்களா என்ற அடிப்படையில் சில கேள்விகள் அமெரிக்க தூதரால் எழுப்பப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் அதை கட்டாயம் செய்வார் என்ற அடிப்படையில் சித்தார்த்தன் தனது கருத்தை தெரிவித்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்றால் இதனை செய்திருக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்காமல் விட்டுவிட்டு காலக்கிரமத்தில் செய்வோம் என்பதில் அர்த்தமில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலைமைகள், பொருளாதார நிலைமை பிரச்சனைகளுக்கு பிறகு தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்குரிய பதில்களை நாங்கள் கூறியிருந்தோம்.

30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்டார்களோ அதே போலவே தற்போது தென்னிலங்கையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது தமிழ் மக்களுக்கு புதிய அனுபவம் அல்ல. நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியிலும் இருப்பதை மக்கள் கஷ்டமான நிலையில் வசிப்பதையும் அவருக்கு தெரிவித்த தெரியப்படுத்தினோம்.

இலங்கை மக்களுக்கு அமெரிக்கா செய்யக்கூடிய உதவிகளை செய்வோம் என அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். இதைவிட இராணுவம் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண குடாநாட்டில் பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கைவசம் வைத்திருப்பது சம்பந்தமாகவும் கேட்கப்பட்டது. இவற்றை வைத்துக்கொண்டு இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியை அவர் கேட்டிருந்தார்.

பலவிதமான பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தினர் அங்கு மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் தமக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தை எடுத்துக் கூறினோம்.

தமிழ் மக்கள் காணிகள் பறிக்கப்படுவது சம்பந்தமாகவும் பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.பொதுவாக அமெரிக்க தூதுவர் தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினைகள், என்னென்ன தேவையாக இருக்கின்றது என கேட்டறிந்து கொண்டார் – என்றார்.

#SriLankaNews

ஞாயிறு நடைபெறும் கண்டன பேரணியில் அணிதிரள்க! – நீதியரசர் விக்னேஸ்வரன் அழைப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (03.04.2022) 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் கண்டன பேரணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியில் சகல பொதுமக்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னரான தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான வகிபாகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு சிரமங்கள், இடையூறுகள், சவால்களின் மத்தியில் மன உறுதியுடன் தளராமல் அவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு நாம் அனைவரும் எம்மால் இயன்றளவு உடல், உள ரீதியான ஆதரவை கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சஅவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் நீதிக்காக போராடும் தாய்மார்களின் நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தும் நோக்கங்களுக்காகவே ஞாயிறுக்கிழமை அன்று கண்டன பேரணி யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நான் சுகயீனமாக இருப்பதால் என்னால் அன்றைய தினம் கலந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை. ஆனால், இந்த போராட்டத்தில் எனது கட்சி, உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரையும் மற்றும் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன். – என்றுள்ளார்.

#SriLankaNews

மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய இழுவைப்படகுகள்! – நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பல வருடங்களாகவே எமது கடற்தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன.

முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில் கடல் வளங்கள் பலவற்றையும் இல்லாமல் ஆக்கியவர்களே இப்போது இழுவைப் படகுகள் மூலம் எமது வளங்களையும் சூறையாடி வருகின்றார்கள். இவ்வாறு தொடர்ந்தால் அது எமது மீனவர்களையே வெகுவாகப் பாதிக்கும்.

ஆனால் இதே நேரத்தில் வன் முறையில் ஈடுபடுவோர் யார், எதற்காக அவ்வாறு ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாந் தரப்பாரின் உள்ளீடுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதோ என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

எமது கடற்தொழிலாளர்களின் வலைகள், படகுகள் போன்ற உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு எம்மவர்களின் வாழ்வாதாரமே அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவை போதாதென்று எம்மவர்களின் உயிரிழப்புக்களும் தாங்கொண்ணாத விதமாக அதிகரித்து வருகின்றன.

நான் முதலமைச்சராக இருந்த போது டெல்லியில் இருந்து இங்கு வந்த உயர் அதிகாரியுடன் இது பற்றி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டபோது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

இந்தியா – இலங்கை மத்தியில் இருக்கும் கடலில் இழுவைப் படகுகள் பாவிக்கப்படக் கூடாது என்றும் அவை யாவும் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் சென்று பல நாட்கள் இருந்து மீன் பிடித்து வர ஆவன செய்ய வேண்டும் என்றும் ஆழ் கடலுக்குச் செல்லும் இழுவைப் படகுகள் அதற்கேற்றவாறு இரு அரசாங்கங்களினாலும் மாற்றி அமைக்க உதவப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு உறைக்கும் விதமாக ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். – என்றுள்ளது.

#SriLankaNews

தமிழ்க் கட்சிகளின் கூட்டு ஆவணம் மலையக, முஸ்லீம் கட்சிகளால் புறக்கணிப்பு?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கையொப்பமிட்டன. எனினும், மலையகக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் கையொப்பமிடவில்லை.

இதனால் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பங்களிப்புடன் மாத்திரம் குறித்த ஆவணம் பாரத பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை விரைவில் நேரில் சந்தித்து, மேற்படி ஆவணத்தை டில்லிக்கு அனுப்புவதற்காக கையளிக்கவுள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் அரசில் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்படி கூட்டு ஆவணக் கோரிக்கை கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர்.

நீதியரசர் சிவீ விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டனர். மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடவுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அவரது தரப்பினதும், முஸ்லிம் தரப்பினதும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே பொது ஆவணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்கு மனோவிடம் நேரிலும், ஹக்கீமுக்கு தொலைபேசியிலும் சம்பந்தன்

தெரியப்டுத்தியுள்ளார்.

#SriLankaNews

வீரத் தமிழனின் பிறந்ததினம் இன்று – சபையில் நீதியரசர் விக்னேஸ்வரன்
விவசாயிகளினதும் பொதுமக்களினதும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றோம் என்று கூற வந்த அரசாங்கம் அதனை வெளிப்படையாகக் கூறாது சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் கிட்டும் என்று மறைமுகமாகக் கூற வந்ததின் நோக்கம் என்ன என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதியால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சேதன உரத்துக்கு மட்டுமே அரச நிவாரணங்கள் இனி கிட்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் அசேதன அல்லது இரசாயன உரங்களை இனி யாரும் இறக்குமதி செய்யலாம். ஆனால் அவற்றைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு அரசின் மானிய உதவிகள் கிடைக்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் தற்போது களை கொல்லிகள், கிருமிநாசினிகளையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் இடமளித்துள்ளது. இவற்றை முன்னரே ஆராய்ந்தறிந்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கலாம். மக்களுக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்திய பின்னரே இவற்றைச் செய்வோம் என்று அரசாங்கம் கூறுமாப்போல் இருக்கின்றது.

மாலைதீவோ இந்தியாவோ எமக்கெதிராகத் தாக்குத்தல்களை மேற்கொள்ளமாட்டா. நீங்கள் இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய இனமக்களுக்கு எதிராகத் தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவாபாதீட்டில் பாரிய தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள்.

இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ரூபா.308 பில்லியனை ஒரு சிறிய நாடான இலங்கையின் பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது.

அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறு. படையினர் தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.

பாதீட்டால் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை.

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஸ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்த் தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள்.

இவ் வாரம் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் இவ்வாரத்தினுள் அதி விசேட தினம்.

இத் தருணத்தில் பிரிட்ஸ்காரருக்கு எதிராக ஆயுதம் தாங்கிய சுபாஸ் சந்திர போஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.

“நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றது. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால் தோல்வியுற்றார். ஆனார் யார் தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?”

இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்!”

அஹிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன். – என்றார்.

#SriLankaNews

முதலையின் வாயின் முன்னால் உள்ள இரையாக நாம்!! – நீதியரசர் விக்னேஸ்வரன்
“இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வு அல்ல என்ற யதார்த்தத்தை இந்தியா கூட உணர்ந்துள்ளதாகவே நான் காண்கின்றேன்” இவ்வாறு நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஏனைய கட்சிகளை தவிர்த்து தமிழரசு கட்சி சார்பில் மூன்று பேரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் நியமித்திருப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன? அண்மையில் பல தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரியதற்கும் தமிழரசு கட்சியின் அமெரிக்க விஜயத்துக்கும் ஏதாவது தொடர்பு அல்லது முரண்பாடு இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கேள்விக்கு நான் மிகவும் சுருக்கமான பதிலையே அளிக்க விரும்புகின்றேன். அதற்கு முன்னர் இவை பற்றிய பின்னணியை ஆராய்ந்தால் சாலச் சிறந்தது என்று கருதுகின்றேன். அண்மையில் தமிழ் கட்சிகள் பல யாழ்ப்பாணத்தில் கூடி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை கோருவதற்கு மேற்கொண்ட முடிவு எந்த விதத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையிலானது என்று கொள்ளக்கூடாது.

13 ஆவது திருத்த சட்டம் 1987 ஆம் ஆண்டு இந்திய தலையீடு காரணமாக இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இது இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு அதிகார பரவலாக்கமே அன்றி அதிகார பகிர்வு அல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வாக நாங்கள் கோருவருவது மத்தியில் இருந்து (மீளப்பெறமுடியாதவாறு) அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி கட்டமைப்பையே ஆகும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தற்போது எமது அரசியல் யாப்பின் ஒரு அங்கம். சட்ட ரீதியாக அரசியல் யாப்பின் ஒரு அங்கமான இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய முழுமையான அதிகாரத்தை எமக்கு தருமாறு இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் வலியுறுத்தும் உரிமை எமக்கு இருக்கின்றது.

இந்தச் சட்டத் திருத்தத்தின் கீழ் எமக்கிருக்கும் முழுமையான அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் தார்மீகக் கடமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கின்றது. 13 ஆவது திருத்த சட்டம் 1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அன்றே இது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அல்ல என்று திட்டவட்டமாக தமிழ் அரசியல் தலைமைகளினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்த 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நாம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் செய்து வந்துள்ளோம்.

நான் முதலமைச்சராகப் பதவி வகித்ததும் பலவீனப்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ்த் தான். நான் முதலமைச்சராக பதவி வகித்தபோதே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் பொலிஸ் அதிகாரம் உட்பட எல்லா அதிகாரங்களையும் எமக்கு வழங்குமாறும் நான் வலியுறுத்திவந்தேன். ஏனென்றால், சட்ட ரீதியாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வது எமது உரித்து.

அதேவேளை, இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் எமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். கௌரவ நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூட்டுறவு சமஷ்டியின் அவசியம் பற்றி வலியுறுத்தி இருந்தார். ஆகவே, இந்தியா கூட இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வு அல்ல என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ளதாகவே நான் காண்கின்றேன்.

இன்று எம் மீது பாரிய ஒரு இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற அரசாங்கத்தின் திட்டம் தமிழப்; பேசும் மக்கள் மீதான மற்றொரு முள்ளிவாய்க்கால் அன்றி வேறு எதுவும் இல்லை. இதுவே உண்மை. இதனை நாம் வெற்றிகரமாக முறியடிக்க வேண்டிய போர்க்களத்தில் நிற்கின்றோம். எமது கண்களுக்கு முன்பாக ஏற்கனவே நாளாந்தம் பல ஏக்கர் காணிகளை நாம் இழந்துவருகின்றோம். இந்த ஆபத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள கையில் இருக்கும் எந்த ஒரு துரும்பையும் எமது தற்பாதுகாப்புக்காக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

கையில் இருக்கும் எந்த ஒரு தற்காப்புக் கருவியையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் ஒரு நிலைமையை நாம் ஏற்படுத்தி விடக் கூடாது. ஒரு புறம் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற சட்ட மறுசீரமைப்பின் ஊடாக நாம் ஒரு தேசம் என்று எம்மை கூறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ரீதியான, வரலாற்று ரீதியான, கலாசாரரீதியான, பாரம்பரிய ரீதியான எமது அடிப்படைகளை நிர்மூலம் செய்யும் கைங்கரியங்கள் அரங்கேறிவரும் வேளை, மறுபுறத்தில், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக 13 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக எமக்கு கிடைக்கும் சில அதிகாரங்களையும் இல்லாமல் செய்யும் சூழ்ச்சியும் நடைபெறுகின்றது.

அதேவேளை, வடக்கு -கிழக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமான இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் முதலையின் வாயின் முன்னால் உள்ள இரையாக நாம் வாழ்கின்றோம். ஒவ்வொரு 6 தமிழ் மக்களுக்கும் 1 இராணுவ வீரன் என்ற அளவில் வடக்கு-கிழக்கின் இராணுவமயமாக்கல் இருக்கின்றது. முல்லைத்தீவில் இந்த நிலைமை 2 பொது மக்களுக்கு 1 இராணுவ வீரன் என்ற விகிதத்தில் மோசமாக இருக்கின்றது.

எமது கண்களுக்கு புலப்படாமல் எமது அடர்ந்த காடுகளுக்குள் பாரிய இராணுவ குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. எமது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகின்றது. இவை எல்லாம், எமது பாரம்பரிய வாழ்விடங்கள், கலாசாரம், வாழ்வு, அடையாளம் ஆகிய எல்லாவற்றையுமே இல்லாமல்செய்யும் இனஅழிப்பு நடவடிக்கையே அன்றி வேறு எதுவும் இல்லை.

இந்த இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு “பாதுகாப்பதற்கான பொறுப்பு” (Responsibility to Protect/R2P ) என்ற ஐக்கிய நாடுகள் கோட்பாட்டை பிரயோகம் செய்ய வேண்டிய கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது. எந்த ஒரு இடத்திலும் இனப்படுகொலை அல்லது இன சுத்திகரிப்பு நடைபெறும் அல்லது நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் இருக்கும்பொழுது அவற்றில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே பாதுகாக்கும் சர்வதேச சமுகத்தின் பொறுப்பை R2P கோட்பாட்டின் முதலாவது பொறுப்பான “Responsibility to Protect/R2P ” வலியுறுத்துகின்றது.

வடக்கு கிழக்கில் நிலைமைகள் எதனையும் நான் மிகைப்படுத்தி கூறி, எம்மை இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச சமுகத்தின் “சுநளிழளெiடிடைவைல வழ Pசநஎநவெ” பொறுப்பை நான் வலியுறுத்தவில்லை. இதுதான் யதார்த்தம். நிலைமைகள் நாளுக்கு நாள் இங்கு மோசமடைந்து வருகின்றன.

இந்த ‘Responsibility to Protect’ தலையீட்டை தலைமை ஏற்று முன்னெடுக்கும் எல்லா தகுதிகளும் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், இந்திய- இலங்கை ஒப்பந்த ரீதியாகவும் இருக்கின்றது. ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு இந்தியா முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு தலையீட்டாளர் (Effective and legitimate intervener) ஆகும்.

இன்று பாரிய இனஅழிப்பு ஒன்று கட்டவிழ்த்து விடப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தெளிவாகத் தென்படுகின்றன. காணிகள் பறிபோகின்றன, வாழ்வாதாரங்கள் பறி போகின்றன, எமது வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் துரிதமாகத் தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன. போரின் பின்னர் படையினர் தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கான ஏக்கர்களில் குடிகொண்டு வருகின்றார்கள்.

மீனவர் விவசாயிகள் சிறுகைத் தொழிலாளர்கள் பாடு வருந்தத்தக்கதாய் இருந்து வருகின்றது. நாம் ஆபத்தில் இருக்கின்றோம் ஆகவே கால தாமதம் இன்றி எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்தியா இது தொடர்பில் காத்திரமான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது விருப்பம்.

அதேவேளை, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு நாம் கூட்டாகக் கோருவது அதனை நாம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடும் என்று வெளிநாடுகளில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் பலர் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

நீர்த்துபோகச்செய்யப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இருந்தும் எமது வடக்கு – கிழக்கு தாயகத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை நாம் பறிகொடுத்துள்ளதும் பல சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதும் உண்மை. அதேபோல, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் பயன்படுத்தி பறிக்கப்பட்ட சில நிலங்களை நாம் மீட்டுள்ளதும், அபகரிக்கப்படவிருந்த பல ஆயிரம் ஏக்கர் காணிகளை பாதுகாக்க முடிந்துள்ளதும் சிறிய அளவிலேனும் எமது மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் செய்ய முடிந்துள்ளதும் உண்மை என்பதை எம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, அரைகுறை என்றாலும், நாம் எமது கைகளில் தற்போது இருக்கும் அதிகாரத்தை இழந்து விடாத வகையில் செயற்படவேண்டும், அதேவேளை, எமக்கு கிடைக்கவேண்டிய முழுமையான அதிகாரத்தையும் எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஆகவேதான், ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியாவைக் கேட்க விழைகின்றோம். கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது கருத்தாக இருக்கின்றது.

நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு நாம் இந்தியாவைக் கோருவதை நாம் எமது சுயநிர்ணய உரிமையினைக் கைவிட்டு, சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டு 13 ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்தக்கூடாது. 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே எமது சட்ட ஏடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான ஏற்பாடுகள். எமது நிரந்தரத் தீர்வு வேறு திசை நோக்கிச் சென்று பெற வேண்டிய ஒன்று.

நான் முன்னர் குறிப்பிட்டபடி, 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் 13 ஆவது திருத்தம் இலங்கை அரசியல் அமைப்பில் இருக்கின்றது. இருக்கும் போது எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் 2009 ஆம் ஆண்டுவரை ஆயுத ரீதியாக முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அரசியல் ரீதியாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, இன அழிப்புக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் தமிழ் மக்களின் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் இன அழிப்புக்கான நீதியை பெறுவதற்கு நாம் எடுக்கும் பிரயத்தனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்.

எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலையில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு உத்தியாக எமது கைகளில் இருக்கும் சட்ட ரீதியான 13 ஆவது திருத்தத்தை எவ்வாறு சாதுரியமாகப் பயன்படுத்தலாம் என்பதே நடைபெற்ற கலந்துரையாடல்களின் சிந்தனை ஆகும்.

வட – கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல்களை முடிந்தளவுக்கு எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் தேர்தல்களை தட்டிக்கழித்து தனது சிங்கள- பௌத்த இனம் சார்ந்த தேசிய கொள்கைகள் , சட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை சில கைக்கூலி தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தி மத்திய அரசாங்கம் அமுல்படுத்துவதை தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும், வேலை இல்லாமல் இருக்கும் எமது மக்களை தவிர்த்து சிங்கள மக்களுக்கு எமது பிரசதேசங்களில் வழங்குவதை தடுப்பதற்கும், திட்டமிட்டு மேகொள்ளப்பட்டுவரும் சமூக விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றில் இருந்து எமது இளைய சமுகத்தை காப்பாற்றுவதற்கும், ஓரளவுக்கேனும் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும், வீழ்ச்சியடைந்த எமது கல்வியை முடிந்தளவுக்கு மீள கட்டியெழுப்புவதற்கும், போரினாலும் மற்றும் கொரோனாவினாலும் நலிவடைந்து நிற்கும் எமது மக்களின் வாழ்வை மீள கட்டியெழுப்புவதற்கு எம்மாலான சில திட்டங்களை செயற்படுத்துவதற்கும், சட்டத்தில் இருக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்தியாவின் கடப்பாட்டையும் பொறுப்பையும் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை, இந்த அதிகாரங்களை வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியின் இடையூறு எதுவும் இன்றி அர்த்தம் உள்ள வகையில் பிரயோகிக்கமுடியும் வகையிலான உரிய உத்தரவாத ஏற்பாடு ஒன்றையும் இந்தியா ஏற்படுத்தி தருவதுடன், ஒற்றை ஆட்சிக்கு உட்படாத ஒரு சமஷ்டி அடிப்படையிலான நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்துடன் தமிழர் தரப்பு பேச்சுவார்தைகளிலும் இராஜதந்திர செயற்பாடுகளிலும் ஈடுபடுவது அவசியம். சர்வதேச ரீதியான மத்தியஸ்தம் இல்லாமல் எமது பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண முடியாது. அந்த அடிப்படையில், அமெரிக்காவுடன் பேசுவதற்கு தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. இதில் எனக்கு எந்தவிதமான காழ்புணர்ச்சியோ அல்லது பொறாமையோ இல்லை.

எந்தப் பின்னணியில் எவர் பேச்சுக்குச் சென்றாலும் எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலான நிலைப்பாடுகளை அவர்கள் செல்லும் இடங்களில் தெளிவாக வலியுறுத்தும்வரையில் எனது ஆதரவு அவர்களுக்கு இருக்கும். அவர்கள் அவ்வாறு வலியுறுத்;துவதால் முரண்பாடுகள் எதுவும் ஏற்படப் போவதில்லை.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடும் இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றாது. ஏற்கனவே ஒற்றை ஆட்சியின் கீழான 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படாமல் இருக்கின்றது. ஆகவே, ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் இதேமாதிரியான நிலைமையையே மேலும் ஏற்படுத்தும்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். இதனையே, அமெரிக்கா செல்லும் தமிழரசுக் கட்சியின் குழு வலியுறுத்த வேண்டும். இதனை நான் ஏற்கனவே இந்த குழுவில் அங்கம்வகிக்கும் எனது நண்பர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்.

அதேபோல, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணை ஆகியவை தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதுடன் ஆட்சி மாற்றங்களுக்கான கருவிகளாக தமிழ் மக்கள் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்காமல் செயற்படவேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பு. – என்றுள்ளார்.

#SriLankaNews

இராணுவத்தை வெளியேறச் சொன்னால் கைது! – கூறுகிறார் விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும்

1. கேள்வி:- ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?

பதில்:- ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும்போது சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால்.

2. கேள்வி:- பெரும்பான்மையினக் கட்சிகளில் சிறுபான்மையினர் போதிய அளவு இடம் வகித்தால் இந்த நிலைமை எழாதல்லவா?

பதில்:- எழும். இலங்கை போன்ற நாடுகளில் எழும். இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டுள்ளார்கள். தமது இனம் இலங்கை நாட்டில் பெரும்பான்மை என்றாலும் பக்கத்தில், தமிழ் நாட்டில், பல கோடி தமிழர்கள் வாழ்ந்து வருவதால் தமக்கு எக் காலத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில் இலங்கை வாழ் சிறுபான்மையினரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றார்கள்.

தமது தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் அவர்களை எழ விடாமல் தடுக்க வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள்.

அதனால் தம்முடன் சேரும் சிறுபான்மை இன மக்களையும் அவர்களே வழிநடத்துகின்றார்கள். சிறுபான்மை உறுப்பினர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம் இதுவரை காலமும்

பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து பயணித்த தமிழ்த் தலைவர்களே.

பாகுபாட்டுக்குட்படும் சிறுபான்மையினரை அவர்களால் சட்ட ரீதியாகக் காப்பாற்ற முடியாது போய்விட்டது. தனிப்பட்டவர்களை அவர்கள் காப்பாற்ற முடியும். ஆனால் இனங்களின் உரித்துக்களைப் பெற்றுத் தரமுடியாது. எனவே ஒற்றையாட்சியில் பெரும்பான்மையினரின் சிந்தனைகளே மேலோங்கி நிற்பன.

ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட, பாகுபாட்டு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத, மனித உரிமைகள் மீது பற்றுக்கொண்ட, நியாய சிந்தனை பெற்ற பெரும்பான்மைத் தலைவர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவர்கள் தாமாகவே சிறுபான்மை இன மக்களைக் காப்பாற்றும் வகையில் அவர்களின் உரித்துக்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றுவார்கள. அதாவது அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு சிறுபான்மையினர் பெருவாரியாக வாழும் இடங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே ஆள வழிவகுப்பார்கள்.

ஆனால் பொதுவாக இன்றைய சிங்கள மக்கள் தலைவர்கள் இன ரீதியான சிந்தனைகளிலேயே

ஊறியிருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் சிங்களவர் பற்றிய உண்மை வரலாற்றை அவர்கள் உணராததாலேயே. தமிழ் மக்களின் தொன்மை பற்றி அவர்கள் அறியாததாலேயே.

ஆகவே அவர்களின் தலைமைத்துவத்தில் செயற்படுகின்ற ஒற்றையாட்சி தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்காது. ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயக நிலங்கள் பறிபோவன. தற்போது அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

3. கேள்வி :- அதனால்த்தான் சமஸ்டி அரசை தமிழ்க் கட்சிகள் கோருகின்றனவா?

பதில் :- நிச்சயமாக! அதிகாரப் பகிர்வுக்கு செயல்வடிவம் கொடுப்பது சமஸ்டி அரச முறையே.

4. கேள்வி :- ஆனால் உங்கள் கட்சி கூட்டு சமஸ்டியை கோரியுள்ளதே?

பதில் :- ஆம்! கூட்டு சமஸ்டி முறை கூடிய அதிகாரங்களை அலகுகளுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு வழங்கும். அதாவது கூட்டு சமஸ்டி என்பது தனித்துமான நாடுகள் பலவற்றை நிரந்தரமாக சில காரணங்கள் கருதி ஐக்கியப்படுத்துவதேயாகும். தமிழ் பேசும் பிரதேசங்ககள் 1833 வரை தனித்துவ ஆட்சிகளாகவே இருந்து வந்தன.

சமஸ்டி முறையில் மத்திய அரசின் உள்ளீடு வெகுவாக இருக்கும். ஆனால் கூட்டு சமஸ்டியில் தனி அலகுகள் தம்மைத் தாமே ஆண்டு கொண்டு ஒரு சில காரணங்களுக்காக மட்டுமே மத்தியுடன் ஒத்துழைக்கும் விதத்தில் அமைவன.

சமஸ்டி, கூட்டு சமஸ்டி இடையேயான வேற்றுமைகளை கோடிட்டுக் காட்டுவது சிரமம். ஆனால் பொதுவாக மத்திய அரசாங்கமானது கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த அதிகாரங்களையே கூட்டு சமஸ்டியில் பெற்றிருக்கும். நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் மேலும் சில சில்லறை அதிகாரங்கள் போன்றவை மத்தியிடம் இருப்பன.

ஒரு விசேட அம்சமாக குறிப்பிடுவதென்றால் மத்திய அரசாங்கத்திற்கு கூட்டு சமஸ்டியின் கீழ் நேரடியாக இறைவரியை தனிக் குடிமக்களிடம் இருந்து பெற முடியாது. பதிலாக அவற்றை பிராந்திய அரசாங்கங்கள் மூலமாகவே பெற வேண்டியிருக்கும். நாட்டின் தனி மனிதர்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இருக்காது.

தற்போது ஒற்றையாட்சியின் கீழ் எங்கள் வளங்கள் பறி போகின்றன. காணிகள் பறி போகின்றன. மக்கள் வறுமையின் விளிம்பில் நின்று தத்தளிக்கின்றார்கள். ஆனால் தாம் செய்த தவறுகளிற்காக இறைவரிகள் மூலமாக எம்மை வருத்தி வருகின்றனர். கூட்டு சமஸ்டி முறை இவை யாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வரும்.

5. கேள்வி :- அப்படியானால் மத்திய இராணுவத்தை பிராந்தியங்களில் இருந்து வெளியேற்றலாமா?

பதில் :- கட்டாயமாக! வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகின்றது.

உள்நாட்டுப் பிராந்திய பாதுகாப்பு கூட்டு சமஸ்டியில் பிராந்தியங்களுக்கே வழங்கப்படும். நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வரும். பொலிஸ் உரித்துக்கள், காணி உரித்துக்கள், பிராந்திய உள்நாட்டு பாதுகாப்பு அனைத்தும் பிராந்திய அலகுகளுக்கே வழங்கப்படும்.

இன்று படையினர் வடகிழக்கு மாகாணங்களில் போரின் பின்னர் தொடர்ந்து இருப்பதால் பல பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

1. எமது வாழ்வாதாரம் தடைப்படுகின்றது. எமது நிலங்களை இராணுவம் பயன்படுத்தி இலாபம்

பெறுகின்றார்கள்.

2. எமது சுதந்திரம் தடைப்படுகின்றது. மக்கள், இராணுவம் முகாம் இட்டிருக்கும் இடங்களினூடாகப் பயணிக்க அஞ்சுகின்றார்கள். சுற்று வட்டார பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சத்தில் வாழ்கின்றார்கள்.

3. தமிழர் தாயக நிலங்கள் பறிபோவதற்கு படையினரே உறுதுணையாக நிற்கின்றார்கள். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்து உள்ளார்கள்.

4. திணைக்களங்களுடன் படையினர் சேர்ந்து பிறழ்வான வரலாற்றுக் காரணங்களை முன் வைத்து நிலங்களைக் கையேற்கின்றார்கள்.

5. பிக்குகளுடன் படையினர் சேர்ந்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர்.

6. பௌத்த வணக்கஸ்தலங்களை பௌத்தர்கள் அல்லாத இடங்களில் நிர்மாணிக்க படையினர் உதவி புரிந்து வருகின்றனர்.

7. படையினர் வடமாகாண மக்களின் நடமாட்டங்கள், எவர் எவருடன் அவர்கள் உள்ளூரில் தொடர்பு வைத்துள்ளார்கள், மற்றும் அவர்களுக்கு யார் யாருடன் வெளிநாட்டிலும் தொடர்பு இருக்கின்றது என்பவை சம்பந்தமான முழு விபரங்களையும் சேகரிக்கின்றார்கள். இவை உத்தியோகபூர்வ காரணங்களுக்கே என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் பணம் பறித்தல், கடத்தல் போன்ற பல காரியங்களுக்கும் இவ்வாறான தரவுகள் பாவிக்கப்படுகின்றன.

8. இங்குள்ளவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் புலிகள் இயக்கத்துடன் முன்னர் தொடர்புடையவர்கள் என்று கண்டால் உடனே இங்குள்ளவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய படையினர் உதவுகின்றார்கள்.

9. உள்ளூர் மக்கள் பலரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சில நன்மைகளைச் செய்து அவர்களைத் தமது கையாட்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மாற்றுகின்றார்கள்.

10. இன்று மத்திய அரசாங்க கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளாக வட கிழக்கு மாகாணங்களில் வலம் வருபவர்கள் படையினர் இங்கு வேரூன்றி நிற்கின்றார்கள் என்ற ஒரே ஒரு பலத்தின் நிமித்தமாகவே அவ்வாறு வலம் வருகின்றார்கள். அரச பலம் என்பது இவர்களுக்கு இங்கு முகாம் இட்டிருக்கும் படையினர் மூலமே கிடைக்கின்றது. படையினர் வடகிழக்கில் இருந்து வெளியேறி விட்டால் அரச கட்சிகளின் பிரதிநிதிகளின் இருப்பு கேள்விக்கிடமாகிவிடும்.

அது மட்டுமல்ல. தெற்கிலிருந்து இழுவைப் படகுகள் இங்கு வந்து எமது கடல் வளங்களைச் சூறையாடுவது நின்று விடும். திணைக்களங்கள் எமது மக்களின் தாயக நிலங்களைக் கையேற்பது நின்று விடும். பிக்குகள்

பௌத்த வணக்கஸ்தலங்களை ஏதேச்சாதிகாரமாக வடகிழக்கில் நிறுவுவது நின்று விடும். வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நின்றுவிடுவன. இதுவரையில் கைப்பற்றப்பட்ட நிலங்கள் திரும்பப் பெற கூட்டு சமஸ்டி முறை வழி வகுக்கும்.

படையினர் தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் இருப்பதால் இன்னும் எத்தனையோ விபரீதங்கள் நடைபெறுகின்றன. இவை யாவற்றையும் முறியடிக்க வேண்டுமானால் கூட்டு சமஸ்டி எமக்கு அவசியம்.

ஒற்றையாட்சியின் கீழ் “இராணுவமே வெளியேறு” என்றால் அடுத்த நிமிடமே எம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள்.

#SriLankaNews