bomb attack – tamilnaadi.com

இலங்கையில் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக கண்டி வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும், கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகத்துடன், பொலிஸ் உயர் அதிகாரிகள் நேற்று மாலை விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போதே, குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் பொலிஸார் தமக்கு அறிவித்ததாக அக்குரணை பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அஸ்மீன் பாரூக், பிரதேச மக்களுக்கு அறிவித்திருந்தார்.

ரமலான் பெருநாள் காலப் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் வீதி தடைகளை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதேபோன்று, ரமலான் காலப்பகுதி என்பதனால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரின் அறிவிப்பு தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் மிக நீண்ட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.

இந்த கலந்துரையாடலை அடுத்து, பள்ளிவாசல் தலைவரினால், சமூக வலைத்தளங்களில் பகிரும் விதத்திலான குரல் பதிவொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட குரல் பதிவை, அனைத்து தரப்பினருடனும் பகிர்ந்துக்கொள்ளுமாறு பள்ளிவாசல் தலைவர், மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தமது கட்டளைகளை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அனுமதியுள்ளதாகவும் பொலிஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறார்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெண்களை பரிசோதிக்க முடியாது என்ற நிலையில், ஹபாயா போன்ற ஆடைகளை அணிந்து ஆண்கள் உள்ளே வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார், மருத்துவர் ஒருவரை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து அறிவித்ததாகவும் அக்குரணை பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அஸ்மீன் பாரூக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு அக்குரணை பகுதியில் அவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளதாகவும், தற்போதும் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவித்தார்.

‘நாட்டின் ஏனைய பகுதிகளில் வழமை போன்று பாதுகாப்பு காணப்படுகின்றது. இந்த பகுதி தொடர்பில் தகவலொன்று கிடைத்தமையினாலேயே, இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மீது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மை மற்றும் நியாயத்தை கோரி, எதிர்வரும் 21ஆம் திகதி வலுவான மக்கள் கூட்டமொன்றை கூட்டுவதற்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

இன, மத வேறுபாடின்றி, அனைத்து மக்களையும் இந்த மக்கள் கூட்டத்தில் இணைந்துக்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

#srilankaNews

மீண்டும் மற்றுமொரு குண்டுத்தாக்குதல் – 50க்கும் அதிகமானோர் சாவு!!
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், 50 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர்.

ஆனாலும் அவர்களால் தற்காலிக அரசையே அமைக்க முடிந்தது.

எனினும் அந்த அரசு இதுவரை பதவி ஏற்கவில்லை.

தலிபான் ஆட்சி அமைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று குண்டுஸ் மாகாணத்தில் வெள்ளிக்கிழமையான இன்று மசூதி ஒன்றில், தொழுகை இடம்பெற்றது.

அவ்வேளையில் மசூதியை குறிவைத்து பயங்கரவாத குண்டுத் தாக்குதலொன்று நடைபெற்றுள்ளது. அதில், 50 பேர் சாவடைந்தனர்.

90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலை தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் உறுதிப்படுத்தி உள்ளார்.

மசூதிக்கு அருகில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறுக்கையில்,

குண்டுத்தாக்குதலில் படுகாயம் அடைந்த 90க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 50 பேர் சாவடைந்துள்ளனர். அதில் 15 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்னும் பலரது உடல்கள் வந்து கொண்ட உள்ளன. பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் – எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை மதம் சார்ந்த பாடசாலை ஒன்றில் நடந்த குண்டுத்தாக்குதலில் 7 பேர் சாவடைந்தனர்.

மேலும் இவ் இரண்டு தாக்குதல்களையும் இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு இன்று 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திட்டமிடல், உதவி வழங்கல் மற்றும் பலத்த காயங்களுக்கு உட்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நியூயோர்க் தாக்குதல் – ஆவணங்களை வெளியிட பைடன் உத்தரவு!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவுதினம் சில நாள்களில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந் நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபா் பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

நியூயோர்க் நகரில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பா் மாதம் 11 ஆம் திகதி இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

பயணிகள் விமானங்களைக் கடத்தி இரட்டைக் கோபுர கட்டடத்தின் மீது மோதச்செய்து நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் 2 ஆயிரத்து 977 போ் உயிரிழந்தனா்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் விருப்பத்தின்படி. தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்கள் இன்னும் ஆறு மாதங்களில் கட்டங்கட்டமாக வெளியிடப்படவுள்ளன,

குறித்த பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

எனவே இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை அடங்கிய இரகசிய ஆவணங்கள் கட்டங்கட்டமாக வெளியிடப்படவுள்ளன – எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.