boats – tamilnaadi.com

எல்லை தாண்டிய 22 இந்திய மீனவர்கள் கைது!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNEws

மயிலிட்டி துறைமுக இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பம்!!
யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல், படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி, சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல், துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

புத்தள படகு ஏலம் நேற்று நடந்தது!!
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய படகுகள் புத்தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் படகு ஒன்று தலா 51000 ஆயிரம் ரூபா வீதம் நான்கு படகுகளும் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இந்த படகுகள் ஏல விற்பனைக்கு யாழ்ப்பாணம், குருணாகல், வாரியாப்பொல உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கு மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு படகுகள் ஏலம்!
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து இன்று ஏலத்தில் விடப்பட்ட 5 இந்தியப் படகுகளும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேந்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் இன்றையதினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த 5 படகுகளும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றையதினம் காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் ஏலத்தில் விடப்பட்டதில் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஐ.நா பிரதிநிதிக்கு மணி விளக்கம்!!
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும்  மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் பி மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ. த. ஜெயசீலன் ஆகியோர் பங்குபற்றினர்.

கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எமது மக்களை காப்பாற்றும் என்று நாம் பெரும் நம்பிகை கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

150,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது  காணாமல் ஆக்கப்பட்டனர். இந் நிலையில் போருக்கும் பிற்பாடும் ஐநா தொடர்ந்தும் தவறு இழைத்து வருகின்றது.

யுத்ததத்தில் போர்குற்றம் புரிந்ததாகக்கூறப்படுகின்ற படை அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

அவர்கள் தமிழ்இனத்தின் மீது மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இனப்படுகொலை எனபது சர்வதேச குற்றம் அதை யாரும் ஒரு நாட்டின் உள்ளகரீதியான பிரச்சனை என்று கைவிட்டு விடமுடியாது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் எங்களுடைய பொருளாதாரவளம், கல்வி பண்பாடுகள் கலாச்சாரம் போன்ற எங்களுடைய அப்டிபடைகள் அழிக்கப்படுகின்றன.

2ஆம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை  ஏன் உருவாக்கப்பட்டது எனில் நாடுகளைப் பாதுகாப்தற்கு அல்ல அந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக.

அந்த நியாயப்பாட்டை அதன் முக்கியத்துவத்தை ஐ.நா முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியுத்தம் தொடர்பான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல கடந்த காலங்களில் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்துவதோடு அதற்கான  தீர்வையும் எமக்கு பெற்றுத் தரவேண்டும்.

தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத்தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன.

அந்த காணி உரிமையளார்கள் இடைத்தங்கல் முகாங்களில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். எமது பொருளாதரம் என்பது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளன.

ஒன்று விவசாயம் மற்றது மீன்படி. இன்று எமது விவசாய காணிகள் பலவற்றை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது.

இதனால் எமது பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. மீன்பிடி என்பது அரச இயந்திரத்தையும் தாண்டி தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறலால் எங்களுடைய மீன்வர்கள் பெரும் துன்பம் அடைகின்றார்கள்.

அவர்களது வலைகள் அறுக்கப்படுகின்றன படகுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்களில் திட்டமிட்டு எமது பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது என்றார்.

#SrilankaNews

சட்ட விரோத படகுகள் அரசுடமையாக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா
சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசுடமையாக்கப்பட்ட படகுகள் பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளிக்கப்பட்டு அவை மீனவர்களின் பாவனைக்காக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பயன்பாட்டுக்கு உதவாத படகுகள் விற்பனை செய்யப்பட்டு இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்ட அபிவிருத்தி பணிகள் வேறு காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையால் சரியாக திட்டமிடப்படாமல் மீனவர்களுக்கு பிரயோசனமற்று சென்றுள்ளது.

ஆனால் விரைவில் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பிரதேச மீனவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டே இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

2 படகுகளுடன் 14 மீனவர்கள் கைது!!
யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த மீனவர்களிடம் இருந்து 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews