Bakery – tamilnaadi.com

30 ரூபாவால் அதிகரிக்கிறது பாணின் விலை???
பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவிகையில்,

மா வழங்கும் நிறுவனங்கள் மாவின் விலையை 35 – 40 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்படி 450 கிலோகிராம் பாணின் விலை 20 ரூபா – 30 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய காரணங்களால் மிகப்பெரும் நெருக்கடியை பேக்கரி துறை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இயங்கும் 6 ஆயிரம் பேக்கரிகளில் தினசரி உற்பத்திகள் 50 வீதம்கூட இல்லை – என்றார்.

#SriLankaNews

ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு பூட்டு!
சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான நேரத்தில் எரிவாயு , கோதுமை மா ஆகியவற்றுக்காக அலைந்து திரிய வேண்டியுள்ளதாகவும், இரவில் மின்வெட்டு காரணமாக ஹோட்டல், பேக்கரிகள் இயங்க முடியாதுள்ளதாகவும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரத் துண்டிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் பேக்கரி கடை நடத்த முடியாதுள்ளதாகவும் கடை வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்க்கமான முடிவை காணாவிட்டால் தமது வர்த்தகத்தை நிரந்தரமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

உணவகங்கள், ஹோட்டல்களுக்கும் பூட்டு!
நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில்,

நாட்டில் பரவலாக எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்துடன் மின்வெட்டும் அமுலாக்கி வருகிறது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வை முன்வைக்காவிடின் ஹோட்டல், உணவகம் மற்றும் பேக்கரி துறைகள் முழுவதுமாக பாதிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையால், உணவு வாங்குவதில் மக்கள் மிகப்பெரும் சிரமத்தை எதிநோக்கி வருகின்றனர் – என்றார்.

#SriLankaNews

முச்சக்கரவண்டி தீப்பிடித்ததில் பாண் எரிந்தது!!
பேக்கரி உணவுகளை விநியோகித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த பாண் உட்பட்ட பேக்கரி பொருட்கள் எரிந்து நாசமாகின.

குறித்த சம்பவம் காலி, தல்கம்பொல பிரதேசத்தில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

மின் வெட்டால் பாதிக்கப்படும் பேக்கரி உரிமையாளர்கள்!
இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் மின்வெட்டு ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதாக சங்கத்தின் தலைவரான என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், தங்கள் தொழிலைத் தொடர மிகக் குறைந்த ஆதரவைக் கொண்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SrilankaNews

அடுத்துவரும் நாட்களில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்!
அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.” – என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

” நாட்டில் தற்போது பேக்கரிகளுக்கு 50 வீதமான கோதுமை மாவே வழங்கப்படுகின்றது. இதனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் தான் பேக்கரிகளில் வேலை நடக்கின்றது.

அடுத்துவரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படும். வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும்.

டொலர் இருந்தால் போதுமாளனவு மாவை வழங்கமுடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும்.” – என்றும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

#SrilankaNews

மேலுமொரு வெதுப்பகத்தில் எரிவாயு வெடிப்புச் சம்பவம்!!
அநுராதபுரம்-குருந்தன்குளம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவமானது நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.

எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பேக்கரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அறியமுடிகிறது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் இணைந்து குறித்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

#SriLankaNews

பாணின் விலையும் 5 ரூபாவால் அதிகரிப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை அடுத்து இன்று முதல் 10 ரூபாவால் கோதுமை மா விலை அதிகரிப்பதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களின் ஒன்றான செரண்டிப் அறிவித்திருந்தது.

சமையல் எரிவாயுவின் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஒரு இறாத்தல் பாணியின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பு வெளியாகிவில்லை.

இதேவேளை நாளை முதல் சோறு பார்சன், கொத்து பார்சல் , பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் ர10 ரூபாவால் அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளன.

இதனால் பாண் உள்ளிட்ட பிற பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா விலையும் அதிகரிப்பு!
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் நேற்று நள்ளிரவு முதல், எரிவாயுக்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பால்மா, சிமெந்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.