authorities – tamilnaadi.com

சாள்சுக்கு மீண்டும் கொரோனா தொற்று!!
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

73 வயதான சார்லஸ், இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்லஸ் முதல் தடவையாக 2020 ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் கடந்த டிசம்பரில் கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

#WorldNews

தடையை மீறி நடந்தது எருது “டான்ஸ்”!!
தடைகளை மீறி சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் பொங்கல் பண்டிகையின் பின் நடாத்தப்படும் எருதாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதனால், கிராமங்களில் எருதாட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில், ஓமலூர் அருகேயுள்ள ரெட்டிபட்டி கிராமத்தில் தடையை மீறி எருதாட்டம் நடத்த இளைஞர்கள் பலரும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

அதனால், கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.கிராமத்தின் நுழைவாயிலில் வெளியூர் ஆட்கள் நுழையாதபடி தடைகளை ஏற்படுத்தி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் திடீரென கோவில் வளாகத்தில் இளைஞர்கள் சிலர் காளைகளை ஓடவிட்டனர். அதனால் கிராம மக்களும், பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

அங்கிருந்த வீடுகள், பள்ளிகள் ஆகியவற்றின் மீது ஏறியும், மரங்களில் ஏறியும் இளைஞர் வேடிக்கை பார்க்க குவிந்திருந்தனர்.

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு கோவில் வளாகத்தில் எருதாட்டத்தை இளைஞர்கள் நடத்தினர்.

ஒவ்வொரு காளையையும் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வடக்கயிறை கழுத்தில் கட்டி இழுத்துவந்து கோவிலை சுற்றி ஓடவிட்டனர்.அப்போது மக்கள் கூட்டத்தை பார்த்த எருதுகள், துள்ளி குதித்து அங்குமிங்கும் என ஓடியது.

பல எருதுகள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை பார்த்த மக்களை முட்டி மோதி தள்ளி கூட்டத்தை கலந்துபோக செய்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கிராமத்திற்கு வந்து எருதாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது ஒமிக்ரோன் மரணம் அவுஸ்திரேலியாவில்!!!
முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அவுஸ்திரேலியாவில் மரணமாகியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

80 வயதான ஒருவரே ஒமிக்ரோன் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மரணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை.

மரணமானவர், முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்தவர் என்பதும் மருத்துவமனையில் அவர் மரணமானார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் நியுசௌத்வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் திங்களன்று 9,107 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.இது, நாட்டின் புதிய தொற்றுநோய்களில் மற்றும் ஒரு உச்சநிலையாகும்.

#WorldNews

போதிய தெளிவின்மையே போராட்டத்திற்கு காரணம் – ஜனாதிபதி கோட்டாபய
நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சேதன விவசாயத்துக்கு மாத்திரமே எனவும், விவசாயிகளுக்கு போதிய தெளிவுபடுத்தாமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மீது அதிருப்தி அடைவதாகவும் கூறினார்.

அத்தோடு பசுமை விவசாயக் கொள்கையில் இருந்து கொண்டு தீர்வு பெறுதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்காத அதிகாரிகள் விலகி செல்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது, மாவட்ட ரீதியில் பார்க்குமிடத்து 70 சதவீதமான பயிரிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், மனசாட்சியின்படி தெளிவாக வேலை செய்யக்கூடிய குழுவொன்றால் மாத்திரமே இவ் வேலைதிட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

#SrilankaNews