asia cup – tamilnaadi.com

இலங்கையை வென்றது இந்தியா
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி கிண்ணத்தை சுவிகரித்தது..

சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட்களை 71 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.

#SriLankaNews

இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி!
ஆசிய கிண்ண மகளிர் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதன்படி, 14 வருடங்களுக்கு பின் இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஹர்சித சமரவிக்ரம அதிகபட்சமாக 35 ஓட்டங்களையும், அனுஸ்க சஞ்சீவனி 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் நுஷ்ரா சந்து மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, 123 என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் பிஸ்மா மரூப் அதிகபட்சமாக 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இனோகா ரணவீர இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

#SriLankaNews

நாட்டை வந்தடைந்த வீர வீராங்கனைகளுக்கு மாபெரும் வரவேற்பு!
ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இரண்டு இலங்கை அணியினரும் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமாண்டமாக வரவேற்கபட்டனர்.

பின்னர் விளையாட்டு வீரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மைட்லண்ட் பிளேஸில் உள்ள இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வளாகத்தில் உள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்திற்கு விசேட வாகனப் பேரணியில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கட் நிறுவனம் மற்றும் இலங்கை வலைப்பந்து சம்மேளனம் இணைந்து இந்த வாகனப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களான டயலொக் ஆசி ஆடா நிறுவனம் இதற்கு இணை அனுசரணை வழங்குகின்றது. இந்நிகழ்வை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் பல தனியார் ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வாகனப் பேரணி கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டார்லி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை வந்தடையும். அந்த இடங்களில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ் பெற்ற இந்த விளையாட்டு வீர,வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி தேசியக் கொடியுடன் வரவேற்க பிரதான வீதிகளுக்கு வருமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

#SriLankaNews

ஆசியக் கிண்ண தொடரில் அசத்தும் இலங்கை! – 6 தடவைகள் வெற்றி மகுடம்! 6 தடவைகள் 2 ஆம் இடம்!!
1984 இல்தான் முதலாவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று வெற்றி மகுடத்தை தனதாக்கிக்கொண்டது.

( 86 இல் இலங்கையில் ஐ.தே.க. ஆட்சி. ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவி வகித்தார்.)

1997 இல் நடைபெற்ற 6 ஆவது ஆசியக்கிண்ண போட்டியில், இறுதிச்சமரில் இலங்கை, இந்திய அணிகள் களம் கண்டன. இதில் 5 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிபெற்று, சாம்பியன் ஆனது.

( 97 மக்கள் கூட்டணி ஆட்சி. ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் செயற்பட்டார்.)

2004 இல் நடைபெற்ற 8 ஆவது ஆசியக்கிண்ண தொடரிலும் இலங்கை , இந்திய அணிகளே இறுதிப்போட்டிக்கு தெரிவாகின. இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றிநடை போட்டது.

(2004 இல் சந்திரிக்கா ஆட்சி)

2008 இல் நடைபெற்ற 9 ஆவது ஆசியக்கிண்ண தொடரின்போதும் இலங்கை, இந்திய அணிகளே இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஆசியக்கிண்ண தொடரில் இறுதி போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் அணியொன்று பெற்ற வெற்றி. அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

( 2008 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி. ஜனாதிபதி மஹிந்த)

2014 இல் நடைபெற்ற 12 ஆவது ஆசியக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன. இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, வெற்றிக் கிண்ணத்தை முத்தமிட்டது.

(2014 இல் மஹிந்த ஆட்சி)

15 ஆவது ஆசியக்கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றி மகுடத்தை தனதாக்கியது.

( ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐ.தே.க. ஆட்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.)

இந்திய அணி 7 தடவைகள் கிண்ணம் வென்றிருந்தாலும், மூன்று தடவைகள் மாத்திரமே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஆர்.சனத்

#Sports

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது கிரிக்கெட் அணி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தி வைத்துள்ளது.

அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் இந்த சாதனைகள் உருவானது என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள், நிர்வாகத்திற்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையிலும், ஒற்றுமையுடன் தாய்நாட்டின் வெற்றிக்காக அனைவரும் செய்த பொதுவான அர்ப்பணிப்பு, கிரிக்கெட் உலகிற்கு மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இந்த மகத்தான வெற்றிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

15 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இலங்கை கடைசியாக தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசியக்கிண்ண தொடரில் சுப்பர் – 04 சுற்றில் இறுதியாக நடந்த போட்டியில் பாகிஸ்தானை, இலங்கை இலகுவாக வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

#Sports

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றுமா இலங்கை? 11 ஆம் திகதி இறுதியாட்டம்
ஆசியக் கிண்ண தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. இறுதிப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆசியக் கிண்ண தொடரில் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தடுமாறிய இலங்கை, அதன் பின்னர் வெற்றி நடைபோட்டது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலதுறைகளிலும் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருகின்றனர்.

இந்நிலையில் 11 ஆம் திகதி இறுதிப்போட்டிக்கு முன்னர், இவ்விரு அணிகளுக்கும் சுப்பர் – 4 சுற்றில் நாளை மோதுகின்றன.

இறுதிப்போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இப்போட்டி இரு அணிகளுக்கும் அமையவுள்ளது.

#Sports