Ampara District – tamilnaadi.com

ஜெனரேட்டர் நச்சுவாயு தாக்கிப் பெண் பலி! உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின் சடலம் ஒப்படைப்பு!
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவத்தில், மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய குடும்பப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (டிசம்பர் 6) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீட்டினுள் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) வாயுவைச் சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர். அனர்த்தம் ஏற்பட்டதை உணர்ந்த உறவினர்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிகாட்டலிலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளிற்கிணங்கவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சட்ட வைத்திய அதிகாரி கசுன் பெரேரா பங்கேற்புடன், மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றது.

சட்ட நடைமுறைகள் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் 3,000 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது!
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் தேவைக்கு அதிகமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசல் அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சூட்சுமமான முறையில் மூன்று நீர்த்தாங்கிகளில் சேகரிப்பட்டு வைத்திருந்த 3 ஆயிரம் ஆயிரம் லீற்றர் டீசலே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

முஷாரப் எம்.பி பாவித்தது RDA வாகனமா?
அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த வாகனம் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியிருந்த விவரங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பதில்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குறித்த வாகனத்தை, கடந்த ஒரு வருட காலமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பாவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து முஷாரப் பயன்படுத்தி வந்த மேற்படி வாகனம் சில வாரங்களுக்கு முன்னர் அவரிடமிருந்து இல்லாமல் போயுள்ளது.

இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, மேற்குறிப்பிட்ட இலக்கத்தையுடைய வாகனத்தை, தமக்குக் கீழ்வரும் மகநெகும வீதி நிர்மாண கம்பனிக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வழங்கியதாக தெரிவித்துள்ளது.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி பெறப்படும் எந்தவொரு சலுகையினையும் தான் பயன்படுத்தப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பொத்துவிலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து மக்கள் முன்பாக சத்தியம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.