allowed – tamilnaadi.com

ரஸ்ய வீரர்களுக்கு எதிரியான பேஸ்புக்!!
ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேஸ்-புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷிய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில் குடிமக்களுக்கு எதிரான நம்பகத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.

#WorldNews

Facebook is the enemy of Russian soldiers !!

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 100 இந்தியர்களுக்கு அனுமதி!
கச்சதீவில் நாளையும், நாளைமறுதினமும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 100 பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இராமேஸ்வரம் வேர்க்கொட்டு பங்குத்தந்தை தேவசகாயம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனப் பதிலளித்தார்.

#SriLankaNews

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் – சாள்ஸ்!!
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,

இலங்கையில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை முதலில் சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள இதிகாசங்களில் தமிழர்கள் பெளத்தத்திற்கு தொண்டாற்றினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவ்வாறு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தமிழ் நாட்டில் அவ்வாறு வாழ்ந்தார்கள்.

இது தமிழ் பௌத்தர்களின் அடையாளமே, இந்து ஆலயங்களில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள், தமிழர்கள் பௌத்தர்களாக இருந்த காரணத்தினால் தான் இந்த அடையாளங்கள் காணப்படுகின்றன.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அடையாளங்கள் தமிழர்களின் அடையாளங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே வவுனியா மாவட்ட தொல்பொருள் திணைக்களம் இப்போது ஆலைய செயற்பாடுகளுக்கு தடை உத்தரவை எடுத்துள்ளது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரம் மாவட்டத்தில் 20 இந்து ஆலயங்கள் இருந்ததாக தொல்பொருள் பதிவுகள் உள்ளன.ஆகவே இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு இன ரீதியான செயற்பாடுகளை அனுமதிக்காது, தொடர்ச்சியாக இந்துக்கள் இங்கு வழிபட அனுமதிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் கூட இந்த பிரதேசங்கள் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

ஆனால் அங்கு தொல்பொருள் பகுதிகளை அழிக்கவோ அல்லது சிங்கள பெளத்த மக்களை எதிரிகளாக நினைத்து அவர்கள் செயற்பட்டதில்லை.

ஆனால் தற்போது சிங்களவர்கள் இலங்கையில் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களின் வழிபாட்டு இடங்களை சிங்கள மயமாக்க நினைப்பது தமிழர்களுக்கு இடம்பெறும் பாரிய அநீதியாகும் என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் ,கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,

இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் இப்போது எம்மால் இதனை கையாள முடியாது. தீர்ப்பு வரும் வரையில் நாம் அனைவரும் பொறுமையாக இருப்போம்.

ஒருபோதும் நாம் இந்துக்களின் உரிமையை பறிக்க நினைக்க மாட்டோம். தொல்பொருள் ரீதியில் சகலரதும் அடையாளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அநாவசிய பிரச்சினைகளை உருவாக்காது தீர்ப்பு வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் – என்றார்.

#SrilankaNews

சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு அனுமதி!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தக ரீதியான விமானங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா இல்லை என்ற சான்றினை, 72 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர, பிற நாட்டினருக்கு விமான நிலையத்தில் வைத்து கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5 இலட்சம் இலவச விசாக்கள் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

#india

இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி!!
அபுதாபியில் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக்க அரசு ஓர் ஆணையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்து செய்யவும் மற்றும் விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும் விவாகரத்து பெறுபவர்கள் ஜீவனாம்சம் பெறுவதற்கும் இந்த ஆணை வகை செய்கிறது.

மேலும் அபுதாபியில் இஸ்லாம் அல்லாத குடும்ப விவகாரங்களைக் கையாள புதிய நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அந்த  நீதிமன்றம் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த ஆண்டு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களில் மாற்றங்களை அறிமுகம் செய்தது.

இதில் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகள், மது அருந்துதல், மற்றும் கெளரவக் கொலைகள் வழக்கில் பல்வேறு விதிகளை இரத்துசெய்தல் உட்பட பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பின் தலைவராக உள்ள அபுதாபியின் ஷேக் கலீப் பின் ஜாயேத் அல்-நஹாயன் இதற்கானஅரசாணையை வெளியிட்டுள்ளார். இவரே அந்த நாட்டின் ஆட்சியாளரும், அதிபருக்கான அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இவ் அரச ஆணையால் அங்குள்ள பொதுமக்கள் ஆனந்தமடைந்துள்ளதாக அந்நாட்டுன் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#WORLD

ஐ.பி.எல். போட்டி – ரசிகர்களுக்கு அனுமதி
இம் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மைதானத்துக்குள் சென்று போட்டிகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்கள் இணையத்தளத்தில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.