ajith hospital – tamilnaadi.com

அஜித்துக்கும் விராத் கோலிக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை.. இப்படி எல்லாம் யாராவது யோசிப்பாங்களா?
அஜித்துக்கும் விராத் கோலிக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை.. இப்படி எல்லாம் யாராவது யோசிப்பாங்களா?

திரை உலகை பொறுத்தவரை அஜித் மிகவும் எளிமையானவர் என்றும் தற்புகழ்ச்சி  விரும்பாதவர் என்றும் குறிப்பாக தனது ரசிகர்களை வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் என்பது தெரிந்தது. கிட்டத்தட்ட அதே போல்  தான் விராட் கோலி இருப்பதாகவும் இருவருக்கும் இடையே அபூர்வ ஒற்றுமைகள் சில இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

அஜித் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் கால்பந்து வீரர் ரொனால்டோவை உதாரணமாக எடுத்து கொண்டு தனது சில பழக்க வழக்கங்களை மாற்றி கடின உழைப்பை பின்பற்றி அதன் பின் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்

அதேபோல் தான் விராட் கோலி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் இடையில் சில சறுக்கல்கள் அவருக்கு ஏற்பட்ட போது ரொனால்டோவை உதாரணமாக கொண்டு தான் அவரும் கடின உழைப்பை பின்பற்றியதாக கூறப்படுகிறது. எனவே அஜித், விராத் கோலி இருவருக்குமே ரோல் மாடல் ரொனால்டோ தான்.

மேலும் அஜித்துக்கு தற்புகழ்ச்சி என்பது சுத்தமாக பிடிக்காது என்றும் தன்னுடைய ரசிகர்களோ மற்றவர்களோ அவரை புகழும் போது அவர் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார். குறிப்பாக அல்டிமேட் ஸ்டார், தல, நாளைய சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் என்றும், அஜித் அல்லது ஏகே என்று தன்னை அழைத்தால் போதும் என்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்

இதே பார்முலாவை தான் தற்போது விராத் கோலியும் பயன்படுத்துகிறார். தன்னை கிங் என்று ரசிகர்கள் அழைத்துக் கொண்டு வந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் மேடையிலேயே தயவுசெய்து என்னை கிங் என்று அழைக்க வேண்டாம், விராட் கோலி என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார்

பதவி பட்டம் என அனைத்தையும் விரும்பாமல், எளிமையான வாழ்க்கை வாழ்வது ரசிகர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் இருப்பது, அனைவருக்கும் ரோல் மாடலாக இருப்பது ஆகிய குணங்கள் அஜித் மற்றும் விராட் கோலி இடையே இருக்கும் அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

ஆதிக் படத்தில் அஜித் நடிக்க பிரபு மகள் தான் காரணமா? ஆச்சரிய தகவல்..!
ஆதிக் படத்தில் அஜித் நடிக்க பிரபு மகள் தான் காரணமா? ஆச்சரிய தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ என்ற படம் தான் அஜித்தின் அடுத்த படம் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் தான் ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து அஜித் வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுவது தவறு என்றும் அதற்கு முன்பே ஆதிக் மீது அஜித்துக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் பணிபுரிந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் அப்போதே அவர் அஜித்துக்காக தயார் செய்து வைத்திருந்த ஒரு கதையை கூறிய போது ’கதை நன்றாக இருக்கிறது, காலம் வரும்போது சொல்கிறேன்’ என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தான் விக்னேஷ் சிவன் படம் டிராப் ஆனபோதே ஆதிக் ரவிச்சந்திரனை தான் அஜித் தேர்வு செய்திருந்தார் என்றும், ஆனால் அவர் அப்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் அப்போது அவரால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு தான் ’விடாமுயற்சி’ படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆதிக்கின் ஒரு சில நடவடிக்கை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பாக தன்னுடைய வெறித்தனமான ரசிகராக இருப்பதை அறிந்த அவர் அவரை குறித்து விசாரித்த போது அவர் பிரபு மகளை திருமணம் செய்தது அஜித்திற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிவாஜி வீட்டின் மேல் எப்போதும் மரியாதை வைத்திருக்கும் அஜித், பிரபு மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றபோது மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஐஸ்வர்யாவை ஆதிக் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர் மீது கூடுதல் மரியாதை அஜித்துக்கு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தான் அவருக்கு திருமண பரிசாக தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவருக்கு ‘குட் பேட் அக்லி’ பட வாய்ப்பை கொடுத்ததாகவும் அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.