Airport Delays – tamilnaadi.com

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் பிரதான மையமாக விளங்கும் சிசிலியின் கெடானியா பகுதி வான்வெளியில் எரிமலைச் சாம்பல் படர்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி வான்வெளி மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால், கெடானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களின் வருகையும் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே விமான நிலையத்தில் உள்ள விமானங்களின் புறப்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பாவின் உயரமான மற்றும் செயலில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருவதால், கெடானியா பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், எரிமலையின் லாவா குழம்பைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.
இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போர்ச் சூழல் ஓரளவுக்குத் தணிந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி கடும் பனிமூட்டம்: 100 விமானங்கள் ரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு!
புதுடெல்லி உட்படப் பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துச் சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

காலை, மாலை எனப் பகல் முழுவதும் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாகி, போதிய வெளிச்சமின்மையால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது.

கடும் பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, புதுடெல்லியில் இன்று மட்டும் சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், 300 விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமானச் சேவைகளைப் போலவே, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டத்தால் பல ரயில்கள் காலதாமதமாகவே புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களை ஓட்டுபவர்களும் பொதுமக்களும் இந்தப் பனிமூட்டம் காரணமாகப் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.