செல்வராசா கஜேந்திரன் – tamilnaadi.com

எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது! – கஜேந்திரன் எம்.பி.
எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தன்னை கைது செய்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு சுடரேற்ற நான் தயாராகும் போது அங்கு நின்ற பொலிஸார் என்னை தடுத்தனர். நான் அவர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கிறதா என கேட்டேன்?

ஆனால் அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்கவில்லை. உங்கள் உரிமையை பறிக்கும் உங்களது செயலை நாங்கள் ஏற்க முடியாது என நான் பொலிஸாருக்கு தெரிவித்தேன்.

இதனால் நினைவிடத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நினைவிடத்தின் முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் மிலேச்சத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் அதனை காலால் தட்டி அணைத்தார்கள்.

எங்களுடைய உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நினைவுகூரும் உரிமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.

சட்டம், ஒழுங்கு என்ற போர்வையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள– பெளத்த மேலாண்மையை நிலை நிறுத்தி கொள்கின்றனர். இது தமிழர்களுடைய உணர்வுகளை பறிக்கும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் எம்பி கைது அரசின் கோரமுகத்தின் வெளிப்பாடே!– சிறீதரன் எம்.பி. சீற்றம்
தமிழின விடுதலைக்கு தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலிக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தமையானது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

தன் இனத்துக்காக உயிர்த் தியாகம் செய்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக ஆயுதமுனையில் அதியுச்ச வன்முறைப் பிரயோகங்களோடு கைதுசெய்யப்பட்டுள்ளமையானது இந்த அரசின் இன்னொரு கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த ஜனநாயக நாட்டில் இத்தகைய மோசமான அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையானது சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத்தெளிவாக காண்பித்துள்ளது.

நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை ஒரு குற்றவாளியைப் போல் வலுக்கட்டாயமாக பொலிஸார் கைதுசெய்தமைக்கு எனது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை!
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரன் எம்.பி. பிணையில் வந்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலிக்க முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் பொலிஸார் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

திலீபனுக்கு சுடரேற்றல்! – கஜேந்திரன் எம்.பி. கைது
திலீபனுக்கு சுடரேற்றல்! – கஜேந்திரன் எம்.பி. கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் சுடரேற்ற முற்பட்ட வேளை, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் நினைவேந்தலை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திருந்தனர்.

திலீபன் நினைவுத் தூபியை சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நினைவேந்தலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அவரை பொலிஸார் கைதும் செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர் நீதிமன்ற தடை உத்தரவு இல்லாமல் இறந்தவர்களை நினைவுகூரும் எமது உரிமையை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் இந்தப் பொலிஸ் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை! – சபையில் கஜேந்திரன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்..

2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை லொஹான் ரத்வத்த புரிந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் மற்றைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை.அவரிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு நாடாளுமன்றிலிருந்து அவரை வெளியேற்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை பல்வேறுவிதமான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம்
குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையெப்பமிட்டு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவே பேரவையில் பொறுப்புக்கூறல் விடயம் இருக்கும்வரை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதமாகும்.

இவற்றை கருத்தில் கொண்டு, இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் – கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டு அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து, மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே ஜெனீவாவுக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.