காட்டுத்தீ – tamilnaadi.com

அமெரிக்காவில் பெரும் காட்டுத் தீ – கட்டுப்படுத்த திணறல்!
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாது தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 5 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது சில மணிநேரத்தில் 400 ஏக்கர் அளவுக்கு பரவலடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத் தீ ஏற்பட்டதையடுத்து அதனை அண்டியுள்ள சாலை மூடப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் வீரர்களும் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

அத்துடன் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வீரர்கள் திணறி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அல்ஜீரியா காட்டுத் தீயால் 42 உயிரிழப்பு!!!
அல்ஜீரியா காட்டுத் தீயால் 42 உயிரிழப்பு!!!

அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜயர்ஸுக்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கபாயோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் திங்கட்கிழமை முதல் தீ பரவி எரிந்து வருகிறது.

தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்களுக்கு துணையாக இராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டனர்.

இதுவரை 100 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்ட நிலையில், ஒடிந்த மரக்கிளைகளைக் கொண்டு பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.

எனினும் இந்த விபத்தில் 25 இராணுவ வீரர்களும், பொதுமக்களில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு
எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு

கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களை எட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும் கரும்புகை மண்டலம் எழுவதையும் தீப்பிளம்புகள் தெரிவதையும் கிறீஸ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன. நகரில் அடுத்தடுத்து மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் குண்டுகளை வீசுகின்ற இருபது தீயணைப்பு விமானங்களும் பல நூற்றுக்கணக்கான வீரர்களும் தீயை அணைப்பதற்குப் போராடி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட வெளிநாடுகள் பலவும் அப்பணிகளில் இணைந்துள்ளன. தீ நெருங்கும் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நகரின் வர்த்தக சங்கத் தலைவர் தனது களஞ்சியம் ஒன்றில் மூச்சிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

வெப்ப அனல் கிறிஸ் நாட்டை “எளிதில் தீப்பற்றும் பொருளாக” (powder keg) மாற்றியிருக்கிறது என்று அந் நாட்டின் பிரதமர் நிலைமையை வர்ணித்திருக்கிறார். கிறீஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாகிய தொன்மை மிகுந்த ஒலிம்பியா (Olympia) நகரம் மற்றும் ஏவியா தீவு (island of Evia) உட்பட 158 இடங்களில் காட்டுத்தீ மூண்டிருக்கிறது. தொடர்ந்து வீசி வருகின்ற அனல் காற்று தீயை மேலும் தீவிரமாக்கி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் நாட்டில் 40 செல்ஸியஸ் அளவுக்கு மேல் (107 degrees Fahrenheit) வெப்பம் பதிவாகி இருக்கிறது. “பருவநிலை மாற்றத்தின் நிஜமான விளைவு இது” என்று கிறீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) தெரிவித்திருக்கிறார்.

கிறீஸ் நாட்டைப் போன்று இத்தாலி உட்பட ஜரோப்பாவின் வேறு பல பகுதிகளிலும் கடும் வெப்பமும் காட்டுத் தீயும் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான துருக்கி அதன் வரலாற்றில் கண்டிராத பெரும் காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளது. துருக்கியின் தெற்கு மத்தியதரை கரையோரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். அனல் மின் நிலையம் (Thermal Power Plant) அமைந்துள்ள பகுதியை தீ நெருங்கியுள்ளதால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர உதவிகளை துருக்கிக்கு வழங்கியுள்ளது.

“டிக்ஸி தீ” (Dixie Fire) என்று அழைக்கப்படும் பெரும் காட்டுத் தீ அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அங்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஹெக்ரேயர் பரப்பளவுக்கு காடுகள், தாவர இனங்கள் அழிந்துள்ளன.

குமாரதாஸன்.

பாரிஸ்.