ஐக்கிய நாடுகள் சபை – tamilnaadi.com

‘இனப் படுகொலையாளி’ ஜனாதிபதி – நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்
‘இனப் படுகொலையாளி’ ஜனாதிபதி – நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 76ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இனப் படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ச என விழித்து அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் இனப் படுகொலையாளி கோத்தாபய என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும் அரசியல் எதிரிகளை அடக்குகின்றமையை நிறுத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை
சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை

கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும்.

கொரோனாத் தொற்றுப் பரவல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இவ்வாறான சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடாக அபிவிருத்திகளுக்கு நிதி மற்றும் கடன் சலுகை போன்ற மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது.

இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஆற்றிய உரையின் வடிவம் வருமாறு,

தலைவர் அவர்களே, நீங்கள் இலங்கையின் நீண்டகால நண்பராக இருக்கிறீர்கள். எதிர்வரும் காலங்களிலும், உங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கொரோனாத் தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது.

ஆபத்துமிக்க புதிய வைரஸ் திரிபுகள் பரவலடைவதைத் தடுப்பதற்கான தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்ளல் போன்றவை தொடர்பில் காணப்படும் சவால்களை உடன் வெற்றிகொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அடையாளம் காணப்படல் வேண்டும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில், இலங்கை வெற்றிகண்டுள்ளது.

தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது.

நாட்டைப் பூட்டுவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்லுயிர்ப் பரம்பல் இல்லாமல் போவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தீர்க்கமானதும் உடனடியானதுமான பலதரப்பு நடவடிக்கையொன்றின் தேவை அவசியமாகியுள்ளது.

எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் போதும், சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை இலங்கை அன்புடன் வரவேற்கிறது.

2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், அதாவது 2009ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது.

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்று, இந்த மாபெரும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை – லாட்வியா ஜனாதிபதிகள் சந்திப்பு!
இலங்கை மற்றும் லாட்வியா ஜனாதிபதிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான 25 ஆண்டுகால உறவை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

கொரோனாத் தொற்றின் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு , சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் கல்வி , டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறைகளில் இரண்டு நாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நாட்டின் தலைவரானார் சபாநாயகர்!
நாட்டின் தலைவரானார் சபாநாயகர்!

நாட்டின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா செயற்படவுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள  நிலையிலேயே சபாநாயகர் தற்காலிக தலைவராக செயற்படவுள்ளார்.

ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்ளும் முகமாக இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளார் .

இதேவேளை,பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்தவாரம் இத்தாலி சென்றுள்ளார். பிரதமர் நாளை அல்லது நாளைமறுதினம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !
உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச  ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக  ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது.

இத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான வீழ்ச்சியை சரி செய்ய முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தனித்தனியாக சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் முக்கிய பல விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைக்கு ஆதரவான நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.