இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி. – tamilnaadi.com

இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?
இந்தக் கழிவறையின் மதிப்பு 7 கோடி., வாங்க அலைமோதும் மக்கள்.. இதன் சிறப்பு என்ன.?

பிரித்தானியாவில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பறை ரூபா 7 கோடிக்கு சந்தைக்கு வந்துள்ளது.

சில இடங்களில் நிலம் மற்றும் வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு அறை அல்லது இரண்டு அறை பிளாட் விலை கோடிகளில் உள்ளது.

ஆனால் சில பகுதியில் கழிப்பறை மட்டும் கோடிகளில் இருந்தால் என்ன செய்வது? ஆம், அப்படி ஒரு இடம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒரு பொது கழிப்பறை 180,000 பவுண்டுகளுக்கு (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூபா 7 கோடி) விற்பனையாகிறது.

சுவாரஸ்யமாக, இந்த கழிப்பறையை யாராவது வாங்கினால், குறுகிய காலத்தில் அதன் விலை நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கும். இதனால், கழிப்பறையை வாங்குவதற்கு, மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

இந்த இடம் எங்க இருக்குன்னு ஆச்சர்யமா இருக்கா.! உண்மையில் இந்த கழிப்பறை பிரித்தானியாவின் (UK) Cornwall பகுதியில் Saltash Town-இல் அமைந்துள்ளது.

இது நாகரீகமான பகுதியாக கருதப்படுகிறது. இந்த பகுதி கடல் கடற்கரையில் மிகவும் அழகாக இருக்கிறது. அதனால்தான் இங்கு சொத்து விலை மிக அதிகமாக உள்ளது.

டெய்லி மெயில் செய்தியின்படி, சால்டாஷ் டவுனில் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் முன்பு தடை செய்திருந்தது. ஆனால் தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இங்கு சொத்து விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இங்கு வசதிக்கேற்ப நான்கு அறைகள் கொண்ட வீடு கட்டலாம் என்றும், அதன் விலை சுமார் ரூபா 35 கோடி என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது 180,000 பவுண்டுகளுக்கு விற்கும் கழிவறையில் கூட நாலு படுக்கையறை வீடு கட்டினால் அதன் விலை ஐந்து மடங்கு உயரும். அத்தகைய இடத்தில் இந்த கழிவறை அமைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைகள் அல்லது பிற வசதிகள் இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ளன. இங்கு மூன்று தளங்கள் வரை வீடுகள் கட்டலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு கார்கள் நிறுத்தும் இடமும் உள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இங்கு பசுமையாக உள்ளது.