அமரன் – tamilnaadi.com

ரஜினிகாந்த் படத்தை பார்க்க ஆசைப்பட்ட முகுந்த் வரதராஜன்.. இப்படியொரு விஷயம் நடந்ததா
ரஜினிகாந்த் படத்தை பார்க்க ஆசைப்பட்ட முகுந்த் வரதராஜன்.. இப்படியொரு விஷயம் நடந்ததா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்திய இராணுவத்தில் சேவை தான் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் மூலம் கமல் ஹாசன் தயாரிக்க சாய் பல்லவி கதநாயாகியாக நடிக்கிறார். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதில் “எந்திரன் படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது. அப்போது முகுந்த் என்னிடம் எந்திரன் படத்தை பார்க்க வேண்டும், அதுவும் என்னுடன் சேர்ந்து தமிழில் தான் பார்க்க வேண்டும் கூறிவிட்டார். அந்த நேரத்தில் முகுந்தின் மேல் அதிகாரி மற்றும் அவரது மனைவி எந்திரன் படத்தை இந்தியில் பார்க்க முகுந்த் வரதராஜனை அழைத்துள்ளனர்.

ஆனால், முகுந்த் வரதராஜன் எந்திரன் படத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து தமிழில் பார்க்கப்போகிறேன் என அவர்களிடம் கூறியுள்ளார். சரி எங்களுடன் இந்தியில் ஒரு முறை பார், பிறகு அவர்களுடன் தமிழில் பார் என மேல் அதிகாரியின் மனைவி கூறினாராம்.

இல்லை அதெல்லாம் முடியாது, ரஜினியின் எந்திரன் படத்தை நான் தமிழில் தான் பார்ப்பேன், இந்தியில் பார்க்க மாட்டேன் என கோபத்துடன் கூறிவிட்டாராம். தமிழ் சினிமா முகுந்த் வரதராஜனுக்கு மிகவும் பிடிக்குமாம். அதே போல் அன்பே சிவம் படத்தையும், படத்திலும் வரும் பாடலும் அவருக்கு பிடிக்குமாம்.

அதுமட்டுமின்றி கார்த்தி நடித்து அமரன் படமும் முகுந்திற்கு மிகவும் பிடிக்குமாம். அந்த படத்தின் தலைப்பே அப்படியே முகுந்தின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு கிடைத்துவிட்டது, ரொம்ப மகிழ்ச்சி” என முகுந்த் வரதராஜனின் தந்தை அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. பின்வாங்கப்போவது யார்
அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. பின்வாங்கப்போவது யார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் படத்தின் வசூலும் நல்ல வரவேற்பை பெரும். ஆனால், தற்போது அதில் குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை, படக்குழுவின் இதுவரை ரிலீஸ் எப்போது என அறிவிக்கவில்லை. ஆனாலும் கண்டிப்பாக விடாமுயற்சி தீபாவளி அன்று வெளியிட வேண்டும் என்கிற முடிவோடு தான் படக்குழு வேலை செய்து வருகிறார்களாம்.

இதனால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்கும், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கும் மோதல் ஏற்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி மற்றும் அமரன் இரு திரைப்படங்களையும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்யப்போவது ஒரே நிறுவனம் தானாம். அந்த நிறுவனம் எடுக்கும் முடிவில் தான் இந்த இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் இருக்கிறது என சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்றும், அமரன் திரைப்படம் சில நாட்கள் தள்ளியோ, அல்லது முன்னதாகவோ வெளிவர வாய்ப்பு உள்ளது என்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.