கனடா சென்ற இந்திய தம்பதியருக்கு விபரீதம்

24 66358cc1d60ae

கனடா சென்ற இந்திய தம்பதியருக்கு விபரீதம்

கனடாவில்(Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தம்பதியினர் இந்தியாவை சேர்ந்தவர்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் குறித்த இந்திய தம்பதியர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா – ஒன்ராறியோவிலுள்ள கிளாரிங்டன் (Clarington) என்னுமிடத்தில், மதுபானக்கடை ஒன்றில் திருட முயன்ற நபரை பொலிஸார் பிடிக்க சென்ற வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்றின் மீது சந்தேகநபர் பயணித்த வான் மோதியதில் காரில் பயணித்த இந்திய தம்பதியர் மற்றும் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் வானை ஓட்டிவந்த சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 60 மற்றும் 55 வயதுடைய இந்தியத் தம்பதியரும், அவர்களுடைய பேரனான மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஒன்ராறியோவிலுள்ள Ajax இல் வசித்துவரும் குழந்தையின் பெற்றோரான 33 மற்றும் 27 வயதுடைய தம்பதியும் அதே காரில் பயணித்துள்ளதுடன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உயிரிழந்த குழந்தையின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version