கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை

24 66218ad168060

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை

கனடாவின் ரொறன்ரோவில்(Toronto) வாகன தரிப்பு குற்றச் செயல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அபராத தொகையை உயர்த்துவது தொடர்பான யோசனைக்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்பொழுது அறவீடு செய்யப்படும் அபராதத் தொகை மிகவும் குறைவானது என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அநேகமான அபராதத் தொகைகள் பணவீக்கம் போன்ற காரணிகளைத் தாண்டி அதே நிலையில் காணப்படுவதன் காரணமாக விரைவில் அபராதத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version