அமெரிக்காவை பணயம் வைக்கும் நீதிமன்றின் உத்தரவு.. அச்சத்தில் ட்ரம்ப்

25 683cbdb82eb05

அமெரிக்கா பிற நாடுகள்மீது விதிக்கும் வரிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது அமெரிக்காவை மற்ற நாடுகளிடம் பணயம் வைப்பது போன்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “நீதிமன்றங்கள் எப்படியாவது வரிகள் மீது நமக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், அது எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும்.

அது பிற நாடுகள் நமக்கு எதிராகப் பயன்படுத்தும் அமெரிக்க எதிர்ப்பு வரிகளால் நம் நாட்டை பணயக்கைதியாக வைத்திருக்க அனுமதிக்கும்.

இது அமெரிக்காவின் பொருளாதார அழிவுக்கு பெரும் வழிவகுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version