images 5
உலகம்

ரூ.11க்கு கட்டிப்பிடித்தல், ரூ.110 க்கு ஒரு முத்தம்..!சீனாவில் தலைதூக்கியுள்ள விசித்திரமான வியாபாரம்

Share

ரூ.11க்கு கட்டிப்பிடித்தல், ரூ.110 க்கு ஒரு முத்தம்..!சீனாவில் தலைதூக்கியுள்ள விசித்திரமான வியாபாரம்

சீனாவில் இளம் பெண்கள் வித்தியாசமான வணிக முறையை கையில் எடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன தெருக்களில் தற்போது புதிய மற்றும் சர்ச்சைக்குரிய புதிய வணிகம் ஒன்று தலைதூக்கியுள்ளது.

தற்போது, சீன தெருக்களில் நீங்கள் நடந்து செல்லும் போது இளம் பெண்கள் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும்.

அவர்கள் வழக்கமான சேவைகள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, உறவின் தருணங்களை விலைக்கு வழங்குகின்றனர்.

அதாவது, பொதுவாக உறவுகள் என்பது பொறுப்புணர்வுடன் இருப்பதால், பலர் தங்களுக்கான பிணைப்பில்லாத வெறும் அன்பை மட்டும் பெற விரும்புகின்றனர்.//// இந்த விசித்திரமான போக்கை உணர்ந்து கொண்ட சீன வாசிகள் இதற்கான வணிக சந்தையையும் உருவாகியுள்ளன.

இதன் மூலம் சீனாவில் “எந்தவொரு நிபந்தனைகளும்,  நீண்ட கால உறுதிப்பாடுகளும் இல்லாத “அன்பு” நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது, அதாவது பணத்துக்கு பல்வேறு ரொமான்டிக் அனுபவங்கள் வழங்கப்படுகின்றன.

சீனாவின் ஷென்ஜென் போன்ற நகர தெருக்களில் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருக்கும் இளம் பெண்கள், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல், சேர்ந்து திரைப்படம் பார்த்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றனர்.

விலைப்பட்டியலின் முறையே, ரூ 11க்கு கட்டிப்பிடித்தல், ஒரு முத்தத்திற்கு ரூ.110, சேர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கு ரூ.150, ஒரு மணி நேரம் சேர்ந்து குடுப்பதற்கு ரூ.461, மற்றும் சேர்ந்து வீட்டு வேலை செய்வதற்கு ரூ.2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான போக்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தாலும், பல்வேறு வினாக்களையும், எதிர் கருத்துகளையும் எழுப்பியுள்ளது.

Share
தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...