கனடாவில் அதிகரித்துள்ள வாகன கொள்ளை சம்பவங்கள்

24 6636a3ed7ebcb

கனடாவில் அதிகரித்துள்ள வாகன கொள்ளை சம்பவங்கள்

கனடாவின் ரொறன்ரோவில் ஒவ்வொரு நாற்பது நிமிடங்களுக்கு ஒரு தடவை வாகனமொன்று களவாடப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டில் பதிவான புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆண்டில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸாரும், நகர நிர்வாகமும் கூட்டாக இணைந்து வாகனக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்கள் கொள்ளையிடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version