சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு அவுஸ்திரேலியா: 16 வயதிற்குட்பட்டோர் கணக்குகள் நீக்க உத்தரவு!

ban2 1762774731

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. அங்கு தற்போது நள்ளிரவைக் கடந்துள்ள நிலையில், இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் மன மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த வருடம் ‘இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்திருந்தார்.

இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடக நிறுவனங்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை நீக்க, ‘டிக்டொக், எக்ஸ், மெட்டா (Facebook, Instagram)’ ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, ரூ. 297 கோடி வரை (அவுஸ்திரேலிய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சுமார் ஐந்து மில்லியன் குழந்தைகளும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version