உலகம்
சீனப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை அதிகரிக்க அமெரிக்கா முயற்சி
சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான நடவடிக்கைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது “தேசிய நலன்களை” பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது.
எனினும், சர்வதேச “வர்த்தகப் போரில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை” என அமெரிக்க தரப்பு எச்சரித்துள்ளது.
மேலும், சீனப் பொருட்களுக்கு “அதிகரிக்கும் வரி உயர்வுகளை” அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், சீன நுகர்வோர் பொருட்கள் குறைந்த விலை உயர்வுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் ட்ரம்பின் இறுதி இலக்கு அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பு சர்வதேச வர்த்தகத்தில் சீனாவுடன் பெரிய பேரம் பேசும் திட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.