உலகம்

முதல் நாளிலேயே புலம்பெயந்தோரை அச்சுறுத்த காத்திருக்கும் ட்ரம்ப்

Published

on

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள முதல் நாளிலேயே புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தி அவர்களை நாடு கடத்துவதற்கான சோதனைகளை டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கைகளை, புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் சிகாகோ(Chicago) மாநிலத்தில் தொடங்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன் என ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த குடிவரவு அதிகாரி மற்றும் அரசியல் விமர்சகரான டொம் ஹோமன், சட்டவிரோத குடியேற்றவாசிகளை அடையாளம் காணும் சோதனை நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

முதற்கட்டமாக, சிகாகோ மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேற்றவாசிகளும் வெளியேற்றப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version