உலகம்

விளையாட்டுத்துறையில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானியின் பெயர்

Published

on

விளையாட்டுத்துறையில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானியின் பெயர்

பொதுவாக விளையாட்டுத்துறையில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்றவர்கள்தான் மிகப்பெரிய பணக்காரர்கள் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், அதிகம் வெளியில் தெரியாத பலர், விளையாட்டுத் துறையில் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

அப்படி, விளையாட்டுத்துறையில் கோடீஸ்வரர்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் மற்றும் அவர்களுடைய சொத்து மதிப்பு குறித்து இங்கு பார்க்கலாம்.

விடயம் என்னவென்றால், நேரடியாக விளையாட்டுகளில் ஈடுபடாதவரான இந்திய பணக்காரரான அம்பானியின் பெயரும் விளையாட்டுத்துறையில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கமே வெல்லாத ஒரு விளையாட்டு வீராங்கனை Anna Kasprzak (35).

Dressge என்னும் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்கும் அன்னாவின் சொத்து மதிப்பு, ஒரு பில்லியன் பவுண்டுகள்.

ஆனால், அவரது வருவாய் விளையாட்டுத்துறையிலிருந்து வரவில்லை. தனது தாத்தா நிறுவிய காலணி நிறுவனமான ECCO என்னும் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் அன்னா.

ஆக, அன்னாவுக்கு அந்த நிறுவனத்திலிருந்து கிடைத்த பணத்தால்தான் அவரிடம் ஒரு பில்லியன் பவுண்டுகள் வங்கிக் கையிருப்பு உள்ளது.

டென்னிஸ் உலகில் அதிகம் தெரியாத ஒரு பெயர் இயான் (Ion Tiriac, 85). ஆனால், ரொமேனியா நாட்டவரான இயான் 1968ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் பங்கேற்றவர்.

இயானின் சொத்து மதிப்பு, 1.6 பில்லியன் பவுண்டுகள். பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் ரொமேனியாவில் தனியார் வங்கி ஒன்றை நிறுவினார் இயான்.

அத்துடன், பல்வேறு தொழில்களில் கோலோச்சிய இயான் இன்று விளையாட்டுத்துறையில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானிக்கும் விளையாட்டுத் துறைக்கும் நேரடியாக தொடர்பு இல்லை. என்றாலும், இந்தியன் பிரீமியர் லீகுடன் தொடர்புடையவர் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், மும்பை இண்டியன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 78 பில்லியன் பவுண்டுகள்.

டென்னிஸ் உலகில் அதிகம் பிரபலமாகாதவர் ஜெசிகா (Jessica Pegula, 30).

தனது விளையாட்டு மூலம் ஜெசிகா 13 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்தாலும், விரைவில் தன் தந்தையான டெர்ரியிடமிருந்து (Terry Pegula) 6.2 பில்லியன் பவுண்டுகள் சொத்து ஜெசிகாவுக்கு கிடைக்க உள்ளது.

டெர்ரி, இயற்கை எரிவாயு துறையில் தொழிலதிபர். அத்துடன், பல நிறுவனங்களின் சொந்தக்காரரும் கூட.

ஃபயிக் போல்கியா (Faiq Bolkiah) அதிகம் புகழ் பெறாத ஒரு கால்பந்தாட்ட வீரர். ஆனால், அவர் புருனே சுல்தானின் உறவினர். அவ்வகையில், அவருக்கு 16 பில்லியன் பவுண்டுகள் சொத்து கிடைக்க உள்ளது.

அரியணையேறும் வரிசையில் 12ஆவதாக உள்ளார் போல்கியா. என்றாலும், விளையாட்டு மீதான தனது காதலால் அவர் சாதாரண ஒரு விளையாட்டு வீரராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version