உலகம்
ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா
ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்துள்ள பிரித்தானியா
ஜேர்மனியிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது பிரித்தானியா அரசு.
ஜேர்மன் தலைநகர் பெர்லினின் சில இடங்களில் கால்நடைகளுக்கு foot-and-mouth disease என்னும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, அந்த நோய் பிரித்தானியாவில் பரவுவதைத் தடுப்பதற்காக ஜேர்மனியிலிருந்து, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
அத்துடன், உயிருள்ள கால்நடைகளை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அமைப்பில் கால்நடை நலத்துறை தலைவராக இருக்கும் Mandy Nevel என்பவர் தெரிவித்துள்ளார்.