உலகம்

இன்று கிறிஸ்துமஸை கொண்டாடும் ரஷ்யா! காரணம் இதுதான்

Published

on

இன்று கிறிஸ்துமஸை கொண்டாடும் ரஷ்யா! காரணம் இதுதான்

ரஷ்யாவில் ஜனவரி 7ஆம் திகதியான இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள சுமார் 200 மில்லியன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துவர்கள் ஜூலியன் காலண்டரை பின்பற்றுகின்றனர்.

குறிப்பாக ரஷ்யா, செர்பியா, ஆர்மேனியா, சிரியா, எகிப்து, ஷார்ஜா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் பண்டைய கால இந்த ஜூலியன் காலண்டரை தீவிரமாக பின்பற்றுவதால், அவர்களுக்கு டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் கிடையாது.

மாறாக, ஜனவரி மாதம் 7ஆம் திகதியைத்தான் இந்த நாடுகள் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகின்றனர்.

ஆனால் அண்டை நாடான உக்ரைனில், கடந்த சில ஆண்டுகளாக ஜூலியன் காலண்டர் முறையில் இருந்து மாறி, டிசம்பர் 25ஆம் திகதியே கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவலாயத்தில் நடந்த பிரார்த்தனையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பங்கேற்றார்.

முன்னதாக, உக்ரைனில் கிறிஸ்துமஸ் நாளில் ரஷ்யா அந்நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தீவிர தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version