உலகம்

சிரியாவில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

Published

on

சிரியாவில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

சிரிய (Syria) தலைநகர் டமாஸ்கஸின் வடமேற்கு புறநகர்ப் பகுதியான அட்ராவில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வயிட் ஹெல்மெட்ஸ் என்ற மனிதாபிமான அமைப்பின் மீட்புக் குழுவினர் குறித்த மனிதப் புதைகுழிகளைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் சிரியாவின் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டவர்களின் புதைகுழிகள் பற்றிய காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில் அட்ராவில், வெள்ளை ஹெல்மெட்ஸ் அமைப்பு முன்னெடுத்த தேடுதலில் பல பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பைகளில் உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏழு மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை மரபணு ஆய்வுக்காக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையைக் கண்டறிவதற்கு சில கால அவகாசம் தேவை எனவும் வயிட் ஹெல்மட்ஸ் மனிதாபிமான அமைப்பு தெரிவிக்கிறது.

Exit mobile version