உலகம்

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

Published

on

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு ஹமாஸ் (Hamas) அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று (24.11.2024) ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version