உலகம்
போர் தொடர்பில் ட்ரம்பை வலியுறுத்தும் ஜோ பைடன்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்
போர் தொடர்பில் ட்ரம்பை வலியுறுத்தும் ஜோ பைடன்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்
ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்கா தனது ஆதரவை தொடர ஜோ பைடன் ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்துவார் என Jake Sullivan தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியானால் ரஷ்யா, உக்ரைன் போரை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன் என டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார்.
அதன்படி விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ட்ரம்ப், உக்ரைன் போர் தொடர்பில் விவாதித்ததைத் தொடர்ந்து, போரை தீவிரப்படுத்த வேண்டாம் என கூறியதாக தகவல் வெளியானது.
முன்னதாக, ட்ரம்ப் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை குறைக்கலாம் என்ற கவலைகள் எழுந்தன.
இந்த நிலையில் உக்ரைனைக் அமெரிக்கா கைவிட வேண்டாம் என ட்ரம்பை வலியுறுத்தும் கடைசி முயற்சியை ஜோ பைடன் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan கூறுகையில், “ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பின்போது பைடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் அமெரிக்காவை உள்ளே வைத்திருக்க இறுதி வேண்டுகோள் விடுப்பார்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பைடன் ஜனவரியில் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு முன், உக்ரைன் பாதுகாப்பு உதவி நிதியில் மீதமுள்ள 6 பில்லியன் டொலர்களை செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.