உலகம்

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

Published

on

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்நபர் ரயில்வே உபகரணங்களுக்கு தீ வைக்க முயன்றதாக FSB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ், இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் உக்ரேனிய சதியை முறியடித்ததாக செவ்வாயன்று கூறியது.

TASS செய்தி நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், முகமூடி அணிந்த முகவர்கள் 4 பீர் போத்தல்களுக்கு அடுத்ததாக தரையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் மீது நிற்பதைக் காட்டியது.

தீவைப்பு தாக்குதலை செய்ய கைது செய்யப்பட்ட நபர் 1,000 டொலர்கள் பெற்றதாகவும், தேவையான பொருட்களை வாங்க 100 டொலர்கள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகரிகள், FSBயின் தோல்வியுற்ற சதி பற்றிய கூற்றுக்கள் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

 

Exit mobile version