உலகம்

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

Published

on

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

மதுபோதையில் இருக்கும்போது ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸார் கைது
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் மதுபோதையில் இருப்பதாக கூறப்படும் நபர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்த அவர், உடனடியாக தண்டவாளத்தில் இருந்து காரை இறக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், தண்டவாளத்தில் கார் சிக்கியது. இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் உதவியுடன் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த நபர் காரை ஓட்டி தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version